மறுமணத்தை காரணம் காட்டி இழப்பீடு தொகையை மறுக்க முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 26, 2023

மறுமணத்தை காரணம் காட்டி இழப்பீடு தொகையை மறுக்க முடியாது உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி,நவ.26 - கடந்த 2019ஆம் ஆண்டில் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இழப்பீடு பணத்தைக் கோரியிருந்தார். 

கணவரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் அவர் இடையில் மறுமணம் செய்துகொண்ட காரணத்தைக் கூறி டில்லி உயர்நீதிமன்றம் இழப் பீட்டை மறுத்தது.

இதை எதிர்த்து அப்பெண் தொடர்ந்த வழக்கில் பஞ்சாப்-அரி யானா உயர் நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி அர்ச்சனா புரி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மறுமணம் செய்து கொண்டதாலேயே ஒரு பெண் ணுக்கு அவரது கணவரின் விபத் திற்கான இழப்பீட்டுப் பணத்தை தர மறுப்பது சரியல்ல என தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இறந்தவரின் விதவை யான ரஜினி மறுமணம் செய்து கொண் டதால், அவரது உரிமைக் கோரிக்கையை இழக்க இது ஒரு காரணமாக இருக்க முடியாது என் பதை கவனிக்க வேண்டும்.

விதவையின் மறுமணத்துக்கும், அவருக்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாகவும், இழப்பீடு பெறு வதற்கான உரிமையுடன் அவ ருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரது கணவரின் இயற்கைக்கு மாறான மறைவின் விளைவாக மறுமணம் செய்து கொள்வதற்கான அவரது முடிவு முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட விருப்பம், அதை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்தில் இறந்தவரின் தந்தைக்கும் இழப்பீட்டில் உரிமை உள்ளது எனவும் நீதிபதி அர்ச்சனா புரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment