நிலவுக்குச் செல்லும் நிலாப் பெண்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

நிலவுக்குச் செல்லும் நிலாப் பெண்!

நாசாவின் ஓரியன் விண்வெளி ஊர்தியும், ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டமின் ராக்கெட்டும் இணைந்து, மனிதர் களை விண்ணுக்கு அழைத்துப்போகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

முதல் தடவையாக இதன் மூலம் ஒரு பெண்மணி சந்திரனில் இறங்கி நடக்கப் போகிறார். கூடுதலாக அந்தப் பெண்ணுடன் ஒரு ஆண் விண்வெளி வீரரும் இருப்பார். நாசாவின் ப்ளும் ப்ரூக் ஸ்டேஷன் ஒகியோவில் அமைந்துள்ளது. இங்குதான் ஓரியன் விண்வெளி ஊர்தியின், சுற்றுச்சூழல் சார்ந்த சோதனைகள் நடக்கத் துவங்கியுள்ளன.

இவை முடிந்ததும்  ஓரியன் விண்வெளி ஊர்தி, ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திற்குச் சென்று, அங்கு ஊர்திக்கு பறப் பதற்கான சோதனை உட்பட பலவற்றை செய்வர். இதன்பின் (விண்வெளி நிலைநிறுத்தலுக்கான அமைப்பில்) உள்ள ராக்கெட்டுடன் இணைப்பர். ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்ட ராக்கெட் ஏற்கெனவே பல பரிசோதனைகளுக்கு உட்பட்டு தயாராக இருக்கும்.ஓரியன் விண் ஊர்தியானது பல பாகங்களைக் கொண்டது. அடுத்து அவற்றை, முழுமையாக ராக்கெட்டுடன் இணைத்து பல ஆய்வுகள் செய்யப் படுகின்றன.

செக் அவுட் என பலவற்றை செய்து, இரண்டுமே நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்துகொள்வர். இதனிடையே, அதன் இயங்குபகுதியில் இரண்டையும் மேலே இணைப்பதற்காக விண்வெளி வீரர்கள் தங்கும்  சர்வீசஸ் குடில் போன்றவற்றையும் இணைத்து இறுதி ஆய்வுகளைச் செய்து, இறுதியாக பறப்பதற்கு ஏற்பாடு செய்வர்.இதில் பயணம் செய்யவுள்ள பெண் மற்றும் ஆண் விண்வெளி வீரர்கள் ஏற்கெனவே பல பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் 2024ஆம் ஆண்டு ஓரியன் விண் ஊர்தி, இந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும். இது ஆரம்பம் மட்டுமே! சந்திரனில், ஒரு பெண்மணி கால் வைப்பது நடந்து விட்டால் வருங்காலத்தில், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லத் திட்டம் தயாராகிறது. சந்திரன் மட்டும்தான் என நினைக்க வேண்டாம். செவ்வாய்க்கு பயணிக்கும் திட்டங்களும் தயாராகின்றன. ஒரு வெற்றி, பலவற்றிற்கு பாதையைத் திறந்து விட்டுவிடும். 2024இல் நடக்கும் இந்த பயணம் வெற்றி அடைந்தால், இனி விண்வெளிப் பயணம் சாத்தியமாகி விடும்.


No comments:

Post a Comment