08.04.1928 - குடிஅரசிலிருந்து...
நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான சிறீமான் சர். அண்ணா மலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உப யோகப்படும் என்பது அறியக் கூடாத தாகவே இருக்கின்றது. தவிர பார்ப்பனர் எந்த ஒரு சிறிய தர்மம் செய்தாலும் அது தங்கள் இனத்தாரைத் தவிர வேறு யாருக் கும் உபயோகப் படாதபடியே செய்வது வழக்கம். ஆனால் பார்ப்பன ரல்லாதாரில் பெரிதும் குறிப்பாய் நாட்டுக் கோட்டை நகரத்தார் செய்யும் தருமங்கள் ஒவ் வொன்றும் பார்ப்பனரைப் போல் தமது சமுகத்தாராகிய பார்ப்பனரல்லாதா ருக்கே உபயோகப்படும்படி செய்யா விட்டாலும் முழுதும் பார்ப்பனர் களுக்கே உபயோகப் படும் படி செய்வதே வழக்க மாகி வரு கிறது. கோவில்கள், வேதபாட சாலைகள், சத்திரங்கள், அறுபதாம் கல்யா ணங்கள் முதலியவைகளில் செலவிடும் பணங்கள் போகும் வழிகளை அறிந்த வர்கள் தான் உண்மையை உணரலாம். அதோடு கூடவே, இப்படிப் பார்ப்பனருக்கே பெரிதும் தருமஞ் செய்த பல நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் கோடீஸ் வரர்களாயிருந்து பாப்பராகிவிட்டதையும் அறியலாம். இப்படி இவர்கள் பாப்பர் களாவதில் யாரும் வருத்தப்பட நியாயமி ருப்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் இவர்கள் எந்த சமுகத்தாரிடம் இருந்து நல்வழியிலேயோ, கெட்ட வழியிலேயோ இப்படி கோடிக்கணக்கான பணம் சம் பாதித்தார்களோ அந்த சமுகத்தாருக்குத் துரோகம் செய்து பார்ப்பனரல்லாத மக் களை வஞ்சித்துப் பிழைக்கும் ஒரு சமுகத் தாருக்கே அதைச் செலவு செய்வதானால் அப்படியவர்கள் தண்டனை அடைய வேண்டியது கிரமமா அல்லவா! ஆதலால் நமது சர். அண்ணாமலை செட்டியார் செய் திருக்கும் இந்த 20 லட்ச ரூபாய் தர்மமானது மேல்கண்ட குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கத்தக்க மாதிரியில் தமது தர்மப் பணங்கள் முழுதும் உபயோகப்படும் படியாக தக்க ஏற்பாடும் செய்ய வேண்டும் என்று சர். அண்ணாமலை செட்டியார் நன்மையையும் பார்ப்பனரல்லாதார் நன்மையையும் நமது நாட்டின் நன்மை யையும் உத்தேசித்து வேண்டிக் கொள்ளு கிறோம்.
No comments:
Post a Comment