கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

29.11.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

👉 கேரளா சட்டமன்றம் நிறைவேற்றிய 8 மசோதாக்களில் ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் அனுமதி: 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

👉 காங்கிரசை தேர்ந்தெடுங்கள்; பண்ணையார் தெலங் கானாவை மக்கள் தெலங்கானாவாக மாற்றுவோம் என சோனியா உணர்ச்சிகரமான வேண்டுகோள்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉 எந்த சட்டத்தின் அடிப்படையில் தலைமைச் செயலாளருக்கு மேலும் ஆறு மாதம் பதவி நீட்டிப்பு? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.

தி டெலிகிராப்:

👉 அய்.சி.சி. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவளித்த ஏழு மாணவர்களை ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉'மூர்கோன் கா சர்தார்' (முட்டாள்களின் தலைவர்) என்று பேசிய பிரதமர் மோடி மீதும், ‘ராகு -கேது’ என்று பேசிய அமித் ஷா மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி காங் கிரஸ் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தை சந்தித்தனர்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment