இஸ்ரேல், நவ. 5- இஸ்ரேலின் தாக்குதலால் காசா பகுதியில் நிலைமை விவரிக்க முடியாத வகை யில் உள்ளது. மேலும் மருத்துவ மனைகளை கட்டா யப்படுத்தி மூடுவது நூற்றுக் கணக்கான நோயாளிகளின் உயிரை ஆபத்தில் தள்ளும் என உலக சுகாதார அமைப் பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியஸ் எச்சரித்து உள்ளார்.
ஜெனீவாவில் நடந்த ஒரு செய்தி யாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலை வர், காசா மற்றும் அதன் வடக்கு பகுதியில் இருபத்தி மூன்று மருத் துவமனைகளை காலி செய்ய இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கட்டாயப்படுத்தி வெளி யேற்றப்படும் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிர் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்படு கிறது என்று கூறிய அவர், படுகாயம டைந்த மற்றும் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்ட ஆயிரக்கணக் கான மக்களுக்கு உதவுவதற்காக இஸ்ரேல்-ஹமாஸ் போர் மனிதாபி மான அடிப்படையில் இடை நிறுத்தம் செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
மேலும் இஸ்ரேலில் 1,400 பேர் உட்பட, காசாவில் 8,500க்கும் மேற்பட்டோர் என 10,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள் ளனர். முக்கியமாக இரு தரப்பிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொலையாகியுள்ளனர்.
21,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதோடு 14 லட்சம் பாலஸ்தீனர்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் பலருக்கு நீண்ட கால கவனிப்பு தேவைப்படுவதாக வும் அந்த செய்தியாளர் சந்திப்பில் அதனோம் கூறினார்.
இஸ்ரேலின் பெயரை குறிப் பிடாமல் “காசாவில் நடந்துவரும் பயங்கரத்தை விவரிக்க எங்களிடம் வார்த்தைகள் இல்லை” மருத்துவ மனைகளில் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை நிரம்பி வழி கிறது. பிணவறைகள் நிரம்பி வழி கின்றன மற்றும் மருத் துவர்கள் மயக்க மருந்து இல்லாம லேயே அறுவை சிகிச்சை செய்யும் கொடு மைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடும்பங்கள் தங்குமிடம் மற்றும் கழிப்பறைகள் நிரம்பி வழிகின்றன, இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது என்றார்.
No comments:
Post a Comment