மது போதையில் ரயில்கள் இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

மது போதையில் ரயில்கள் இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

மும்பை, நவ. 28 - இந்தியாவில் உள்ள மூன்று ரயில்வே மண்டலங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்களிடம் நடத்தப் பட்ட மூச்சுப் பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

மேற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே மற்றும் மேற்கு மத்திய ரயில்வே மண்ட லங்களில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் மொத்தம் சுமார் 995 பேர் மது அருந்தி இருந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தரவுகள் மூலம் வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக டில்லியில் 471 ஓட்டுநர்கள் மது அருந்தி இருந்ததாக வும் அதில் 181 பேர் பயணிகள் ரயில் இயக்குபவர்கள் என்றும் தெரிய வந் துள்ளது.

அதில் பணி முடிந்து ரயிலை விட்டு இறங்கிய ஓட்டுநர்கள் 189 பேர் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் 104 ஓட்டுநர்கள் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதில் 41 பேர் பயணிகள் ரயில்களை இயக்குபவர்கள் என்ற தகவலும் வெளி யாகியுள்ளது.

995 ஓட்டுநர்களில் மூன்றில் ஒரு பங்கு ஓட்டுநர்கள் பணி நேரத்தில் மது அருந்தியிருந்த அதிர்ச்சி தகவல் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment