கோவை, நவ. 26- மாட்டுக்கறி சாப் பிடுவியா நீ.. என்று கேட்டு புர்கா வில் 'ஷூ' வை துடைக்க வைத்து மாணவிக்கு தொந்தரவு! செய்யப் பட்டது.
கோவையில் இஸ்லாமிய சமு தாயத்தை சேர்ந்த மாணவியிடம் மாட்டுக்கறி சாப்பிடுவதை சுட்டிக் காட்டி பள்ளியில் 2 ஆசிரியர்கள் தொந்தரவு செய்த நிகழ்வு காவல் துறையில் புகார் வரை சென்றி ருக்கிறது.
கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. நகர் அரசுப் பள்ளியில் முக்தர் என்பவரின் மகள் படித்து வருகிறார். இவரிடம் ஆசிரியர்கள் அபிநயா என்பவரும், ராஜ்குமார் என்பவரும் மாட்டுக் கறி சாப்பிடுபவளா நீ, அப் படியென்றால் உனக்கு திமிர் அதிகமாகத் தான் இருக்கும் எனக் கூறி மாணவி அணிந்திருந்த புர்கா மூலம் ஷூவை துடைக்க வைத்த தாக மாணவியின் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப் படுகிறது.
ஆசிரியர் ராஜ்குமார், மாண வியை வாடி போடி என அழைத்த துடன் 2 மாதமாக மிரட்டி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பெற்றோர் தரப் பில் பள்ளியின் தலைமை ஆசிரிய ரிடம் புகார் அளித்த போது, இதெல்லாம் ஒரு விடயமே இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் புறப்படுங்கள் என பதில் அளித்ததாகவும் ஆனாலும் சம்பந் தப்பட்ட அந்த 2 ஆசிரியர்களையும் அழைத்து தலைமை ஆசிரியர் கண்டிக்கவே இல்லை எனக் கூறி யும் காவல் நிலையத்திற்கு சென் றுள்ளனர் மாணவியின் பெற்றோர்.
இதையடுத்து மாணவிக்கும், பெற்றோருக்கும் தைரியம் அளித்த காவல்துறையினர் நீங்க எப்போ தும் போல் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி வைங்க, ஏதாவது பிரச் சினை வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
அதன் பேரில் முக்தர் தனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய நிலையில், சில நாட் களில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, அபிநயா, ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் மாட்டுக்கறி சாப் பிடுவதை எல்லோர் முன்னிலை யிலும் சுட்டிக்காட்டி தகாத வார்த்தைகளில் திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத் தில் நியாயம் வேண்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலு வலகத்துக்கு சென்ற மாணவியின் பெற்றோர், பள்ளியில் தங்கள் மகளுக்கு என்னவெல்லாம் நடந் தது என்பது பற்றி மனு அளித் துள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரம் பள்ளிக்கல்வித்துறை உயர் அதி காரிகளின் கவனத்திற்கும் சென் றிருக்கிறது.
No comments:
Post a Comment