காடையாம்பட்டி, நவ. 2- சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி பெரியப்பட்டியில் 1987-1992ஆம் கல்வியாண்டில் பயின்ற மேனாள் மாணவ-மாணவியரின் சந்திப்பு கூட் டம் 29..10.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் பெரிய பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி பள்ளி வளாகத் தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச் சியில் 53 மாணவ--மாணவியர் கலந்து கொண்ட னர்.
மாணவர் சந்திப்பு கூட்டத் தின் ஒருங்கிணைப்பாளர் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழக மாவட்ட செயலாளர் சி.மதியழகன் அவர்கள் தொடக்க உரையாற்றினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களும் தங் கள் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய தங்கள் பள்ளி பற்றியும் தங்களுக்கு பயிற்று வித்த ஆசிரியர் பெருமக்கள் பற்றியும் பழைய பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண் டனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி பெரியப்பட்டி தலைமை ஆசிரி யர் து.சுரேஷ் கூட்டத்தில் பங் கேற்று அனைவரையும் பாராட்டி நல்லதொரு வாழ்த்துரை வழங் கினார்.
தங்கள் வகுப்பில் பயின்ற 11 மாணவிகளை போற்றும் வகையில் 11 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட் டன. கூட்டத்தின் முடிவில் அனை வரின் ஒருமித்த கருத்துடன் கீழ்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
தங்கள் வாழ்வை உயர்த்திய தங்கள் பள்ளிக்கும் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பள்ளியின் நுழை வாயில் அருகில் உள்ள மேடு பள்ளமான தரைப் பகுதிக்கு சிமெண்ட் கல் பதித்து தரலாம் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நமது சுற்று வட்டார பகுதி யில் உள்ள மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தி, அரசுப் பள்ளியில் பயில்வதால் ஏற் படும் நன்மைகளையும், அரசு வழங்கும் பல்வேறு நலத்திட் டங்கள் பற்றி கூறியும், அரசுப் பள்ளியில் அதிகப்படியான மாணவர்களை சேர்க்க முயற்சி மேற்கொள்ளலாம் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. மேனாள் மாணவரும், கிராம நிர்வாக அலுவலருமான
மா.பெருமாள் நன்றியுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment