தூத்துக்குடி, நவ. 26- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91-ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்கப் படும் விடுதலை சந்தாக்கள் திரட்டும் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் உற் சாகமாக 25.11.2023 அன்று நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் ,கழக காப்பா ளர்கள் மா.பால்இராசேந்திரம், சு.காசி, மாவட்டத்தலைவர் மு.முனியசாமி, மாவட்டச்செயலாளர் கோ.முருகன் ஆகியோர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களை சந்தித்து ஆசிரியர் அவர் கள் மனுதர்ம யோஜனா திட்டத்தின் ஆபத்தினை விளக்கி சிறப்புரையாற்றிய கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தமைக் கும், மேல்மாந்தையில் அறிவாசான் தந்தைபெரியார் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றியமைக்கும் நன்றி தெரிவித்துபுத்தகங்கள் வழங்கி னர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளுக்கு பிறந்தநாள் பரிசாக விடுதலை சந்தாக்கள் வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டவுடன் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்களுக்கு விடுதலை அனுப்புவோம் எனமகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
"இதயம் காக்க" என்ற வாழ்வியல் சிந்தனை புத்தகத்தை வழங்கியவுடன் உடனே படித்துவிடுகிறேன் என்றார்.
காப்பாளர் மா.பால்இராசேந்திரம் தமது சார்பில் திரட்டப்பட்ட ஒன்பது ஓராண்டு, மாவட்டத்தலைவர். மு.முனி யசாமி ஒன்று, மாவட்டச்செயலாளர் கோ.முருகன் ஓராண்டு, தூத்துக்குடி அ.மதிவாணன்ஓராண்டு, தூத்துக்குடி கி.முத்துராசு ஒன்று, விடுதலை சந் தாக்கள் வழங்கி மகிழ்ந்தார்கள். சந்தாக் கள் திரட்டும்பணி தொடர்ந்து நடை பெறுகிறது.
No comments:
Post a Comment