சென்னை,நவ.22 - பள்ளி, கல்லூரி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை - குட்காபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய தமிழ்நாடு முழுவதும் உணவு பாது காப்பு, காவல் துறை இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (21.11.2023) அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை மற்றும் குட்கா உள் ளிட்ட பொருட்கள் பள்ளிகள், கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனைசெய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் உணவு பாதுகாப்பு துறையினர் காவல் துறையுடன் இணைந்து ஆய்வு மேற் கொள்ள உத்தரவிடப்பட்டது. அதனடிப் படையில், சென்னை மாநகராட்சி பகுதி களில் நியமன அலுவலர், உணவு பாது காப்பு அலுவலர்கள் மற் றும் காவல் துறை அலுவலர்களைக் கொண்டு 19 குழுக்கள் அமைக் கப்பட் டுள்ளது.
இதேபோல், தமிழ்நாடு முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழ கங்களை சுற்றியுள்ள உணவு வணிக நிறு வனங்கள், கடைகள், வாகனங்கள் ஆகிய வற்றில் வாரத்துக்கு 3 நாட்கள் குழுவினர் ஆய்வு மேற்கொள்வார்கள்.
கடந்த அக். 29ஆம் தேதி முதல் உணவு பாதுகாப்பு துறையினர் காவல் துறையு டன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் 3,211 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட் டதில் 173 கடைகளில் தடை செய்யப் பட்ட புகையிலை மற்றும் குட்கா உள் ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு, 428 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள் ளது.
கடந்த 12 நாட்களில் மட்டும் 88 கடைகளின் உரிமம், பதிவுச் சான்று ரத்து செய்யப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட் டுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகார்களை TN Food Safety Consumer App அல்லது 9444042322 என்னும் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும் பதிவு செய்யலாம். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment