வருமான வரி சோதனைகள் - தலைவர்கள் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

வருமான வரி சோதனைகள் - தலைவர்கள் கண்டனம்

சென்னை, நவ. 4- பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும்வருமான வரித் துறை சோதனைக்கு அர சியல் தலைவர்கள் கண் டனம் தெரிவித்துள் ளனர். 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

நாட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும்வருமானவரித் துறை, அமலாக்கத்துறை சோதனைகள் நடை பெறுகின்றன. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலோ, கூட்டணி ஆட்சி நடை பெறும் மாநிலங்களிலோ இதுபோன்ற சோதனை களை நடத்துவதில்லை. இது எதிர்க்கட்சிகளை நசுக்கும் சர்வாதிகார மான போக்கு மற்றும் விதிமீறலாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்

மத்தியில் பாஜக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து எதிர்க்கட்சி களையும், எதிர் கருத்து களையும் ஒடுக்கும் முயற் சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை மற்றும் துணை ராணுவ படைகளையும் பயன்படுத்துகிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் தி.மு.க.வின் அமைச் சர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்களின் இல்லங்களிலும் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை சோத னைகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. தற் போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இல்லத்திலும், அலுவலகத்திலும் அத்து மீறி சோதனைகள் நடத்தப்படுகின்றன. இவை யாவும் சட்டத்துக் கும், நாடாளுமன்ற ஜன நாயக மரபுகளுக்கும் எதிரானது. பா.ஜ.க. தலைவர்களின் இல்லங் களில் இதுபோல் சோத னைகள் நடத்தப்படுவ தில்லை.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. மற்றும் காங் கிரஸ் கட்சிகளில் மாண வர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி என பல்வேறு அணிகள் உள்ளன. அதேபோல பா.ஜ.க.வில் உள்ள அணி கள்தான் வருமானவரித் துறையும் அமலாக்கத் துறையும்.அவர்கள் அவர்களுடைய பணி களை செய்து கொண் டிருக்கின்றனர். கடந்த 2, 3 மாதங்களாகவே இந்த அணிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இவற்றை சட்டப்படி சந்திப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment