சந்திரயான் - 3 நிலவுக்கு சென்றதும், லேண்டர் வாகனம் நிலவில் இறக்கப் பட்டு ஆய்வு செய்ததும் நீங்கள் அறி வீர்கள். இப்படிப்பட்ட சூழலில், இங்கே திண்டுக்கல் ஈட்டி கணேசன் ‘மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சியை செய்து காட்ட வேண்டிய அவசியம் என்ன? உங்களை சிந்திக்கச் செய்ய வேண்டிய தேவை என்ன? இப்போதே இப்படியென்றால், விமானம் கண்டுபிடிக்காத காலத்தில் மனிதன் எப்படி இருந்தான்? கிராமங் களுக்கு பேருந்தே இல்லாத காலத்தில்; சாலையே இல்லாத காலத்தில்; மின் சாரமே இல்லாத காலத்தில்; பள்ளிக் கூடமே இல்லாத காலத்தில்; படிக்கின்ற வாய்ப்பே இல்லாத காலத்தில் நமது முன்னோர்கள் எப்படி இருந்திருப்பார் கள்? சற்று எண்ணிப் பாருங்கள்! ஆனால் பார்ப்பனர்கள் மட்டும் படித்தவர்களாக இருந்திருக்கிறார்கள், எப்படி? நம்மூர்ல தாசில்தார் பார்ப்பனர்; வக்கீல் பார்ப்பனர்; தலைமை ஆசிரியர் பார்ப்பனர். நம்மூரில் இருந்த பார்ப் பனர்க்கு கிடைத்த வாய்ப்பு நமக்கு ஏன் கிடைக்கவில்லை? இப்போது நாம் அனைவரும் படித்திருக்கிறோமே? யார் காரணம்? இடையில் மட்டும் நாம் படிக்காமல் இருந்திருக்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் படித்திருக்கிறார்! திருக்குறள் என்ற மகத்தான் நூலை எழுதியிருக்கிறார். இப்போது எழுதுகின்ற கவிதையை விட சிறப்பாக 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிற ஒன்றே முக்கால் அடி திருக்குறள் சிறப்பாக இருக்கிறது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம் சிறப்பாக இருந் திருக்கிறது. சிவகங்கைக்குப் பக்கத்தில் கிடைத்திருக்கிற கீழடிச் சின்னங்கள் நமது நாகரிகத்தை; கல்வியைப் பற்றிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. அவ் வளவு ஆண்டுகளுக்கு முன் நாம் படித்திருக்கிறோம்! சிறப்பாக; நாகரிகத் துடன் இருந்த இனம், இடையில் எப்படி படிக்காமல் போனது? ஏன் நம்ம தாத்தா படிக்கவில்லை? தாத்தாவுக்கு தாத்தா ஏன் படிக்கவில்லை? ஏன் பாட்டி படிக்கவில்லை? பாட்டிக்கு பாட்டி ஏன் படிக்கவில்லை? 2000 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய திருக்குறளை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது! ‘‘துப் பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு துப்பாய தூவும் மழை.'' இதுவொரு குறள். துப்பு என்ற ஒரு சொல்லை எத்தனை முறை பயன்படுத்துகிறார் பாருங்கள்! 2000 ஆண்டுகளுக்கு நம் முடைய தமிழனால் இவ்வளவு அறி வோடு; ஆற்றலோடு சிந்திக்க முடிந் திருக்கிறது! எழுத முடிந்திருக்கிறது! இப்போது நம்ம தாத்தா கைநாட்டு? பாட்டி கைநாட்டு? எப்படி? படிக்காத ஒரு பார்ப்பானை பார்க்க முடியுமா? அவன் யாரு? இந்த மண்ணுக்குச் சொந்தக்காரனா? இல்லை! ஆரியர்கள் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு கைபர் போலன் கணவாய் வழியாக இங்கு வந்து சேர்ந்த நாடோடிகள்; நாடு மாறி கள். எல்லா அரச வேலைகளிலும் அவன் இருக்கிறான், எப்படி? திருவள் ளுவர் இனத்தைச் சேர்ந்தவன் கைநாட்டு; ஆடு, மாடு ஓட்டிட்டு வந்த வன் மந்திரி. ஆகச்சிறந்த தமிழனை இப்படி படிக்க விடாமல் தடுத்தது யார்? பார்ப்பனர்கள். இந்த பார்ப்பனிய இழிவிலிருந்து நம்மை மீட்டவர்தான் தந்தை பெரியார்! அவரால்தான் கல்வி பெற்றோம். அவரால்தான் வேலை வாய்ப்பு பெற்றோம்! அவரால் தான் மானம் பெற்றோம்! அவரால் தான் அறிவு பெற்றோம்!
- முனைவர் அதிரடி க.அன்பழகன் (நம்பியூர், 31.10.2023)
No comments:
Post a Comment