கருநாடக அரசு பள்ளிகளுக்கு இலவச குடிநீர், மின்சாரம் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

கருநாடக அரசு பள்ளிகளுக்கு இலவச குடிநீர், மின்சாரம் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு, நவ.3 கருநாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும் இல வச குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். 

‘மைசூரு மாநிலம்' என்பது ‘கருநாடகா' என பெயர் மாற்றம் செய் யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவ டைந்த பொன்விழா மற்றும் கருநாடக மாநிலம் உதயமான 68-ஆவது ராஜ் யோத்சவா நிகழ்ச்சி பெங்களூரு வில் உள்ள கண்டீரவா அரங்கில்  நேற்றுமுன்தினம் 

(1_-11_2023) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவ குமார்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கன்னட கலை மற்றும் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையிலான கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சித்தராமையா பேசியதாவது: அகன்ற கருநாடகாவில் வாழும் அனைத்து மொழியினரும் கன்ன டர்கள்தான். இங்கு வாழும் அனை வரும் கன்னட மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும். கன்ன டர்கள் பிற‌மொழியினருக்கு கன்ன டத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். கன்னடர்கள் கன்னட மொழியை மதித்து, அதனை நன்கு கற்க வேண் டும். அப்போதுதான் மற்றவர்கள் இதனை கற்பார்கள். தமிழ்நாடு, கேரளா போன்ற அந்தந்த மாநில மொழிகளிலே அனைவரும் பேசு கின்றனர். ஆனால் கருநாடகாவில் ஆங்கிலம் பேசுகின்றனர். 

அரசு அதிகாரிகளும், அமைச்சர் களும் கன்னடத்தை முழுமையாக கற்க வேண்டும். கடிதங்களை, அறிவிப்புகளை கன்னடத்தில் வெளியிட வேண்டும். கன்னடம் அலுவல் மொழியாக இருந்தும், நடை முறையில் ஆங்கிலத்தை கடைப் பிடிப்பதை இன்றிலிருந்து கைவிட வேண்டும். ஒன்றிய அரசுக்கும், பிற மாநிலங்களுக்கும் கடிதம் எழுதும் போது மட்டுமே ஆங்கிலத்தில் எழுத வேண்டும். கர்நாடகாவில் அரசு பள்ளி, கல்லூரிகளே கன்ன டத்துக்கு முக்கியத்துவம் அளிக் கின்றன. அங்கு அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் அடங் கிய வகுப்பறைகள் உருவாக்கப்படும். முதல்கட்ட மாக அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக மின்சாரம், குடிநீர் விநியோகிப்படும். 

கன்னடத்தில் அதிக மதிப் பெண்களை வாங்கும் மாணவர் களுக்கு சலுகை அளிக்கப்படும்.

ஒன்றிய அரசு ஆங்கிலம், இந்தி யில் மட்டுமே தேர்வுகளை நடத்து கிறது. இதனால் கன்னடர்களால் அதிகளவில் வெற்றி பெற முடிய வில்லை. கருநாடகாவில் இனி கன்னடத்திலும் நடத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத இருக்கிறேன். இவ்வாறு சித்தரா மையா தெரிவித்தார்.


No comments:

Post a Comment