புதுவை பிஜேபி கூட்டணி அரசின் செயல்
புதுச்சேரி, நவ.16- புதுச்சேரியில் ஆளுநர், முதலமைச்சர் பங்கேற்ற பழங்குடியினர் கவுரவ தின விழாவில், பழங்குடியின மக்கள் தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங் குடியினர் கவுரவ தின விழா கம்பன் கலை யரங்கில் நேற்று (15.11.2023) நடந்தது. காணொலி மூலம் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், தலைமைச் செயலளர் ராஜிவ் வர்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள் ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பழங்குடியின மக்கள் தயாரித்த பொருள்கள் கண்காட்சியும் நடந்தது.
விழா அரங்கில் 300 பேர் அமர இருக் கைகள் உள்ளது.
இதில் அரசு அதிகாரிகள், கட்சியினர் அமர்ந்து கொண்டனர். விழாவில் பங்கேற்க வந்த பழங்குடியின மக்கள், நாற்காலிகள் இல்லாததால் தரையில் அமர வைக்கப்பட்டனர்.
இதை கண்ட பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கண்டனம் தெரி வித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் வல்லவன், உடனடியாக நற்காலி களை ஏற்பாடு செய்து அதில் பழங்குடியின மக்களை அமருமாறு கூறினார்.
சேர்களை நாங்கள்
பார்த்தது கிடையாது
அதை ஏற்க மறுத்த பழங்குடியின மக்கள், இதுபோன்ற சேர்களை நாங்கள் பார்த்தது கிடையாது.
எங்களை ஏன் தரையில் அமர வைத் தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். மேலும், 15 ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் கோரிக்கை தீர்க்கப்படவில்லை.
பழங்குடியின மக்கள் கவுரவ விழா மேடையில் ஒரு பழங்குடியின மக்களை கூட ஏன் அமர வைக்கவில்லை, என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விழாவில் திடீர் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து ஆளுநர், முதலமைச்சர் இருவரும், ஆட்சியர் வல்லவன், துறை இயக்குநர் சாய் இளங்கோவனை அழைத்து விளக்கம் கேட்டு, எதற்காக பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்தீர்கள் என கடிந்து கொண்டனர். உடனடியாக இருக் கையில் அமர வையுங்கள் என உத்தர விட்டனர்.
அதைத் தொடர்ந்து, பழங்குடியின மக்களை இருக்கையில் அமர வைத்த பின் விழா தொடர்ந்து நடந்தது.
No comments:
Post a Comment