அருப்புக்கோட்டை அருகே தும்மு சின்னம் பட்டியை சேர்ந்த இளைஞர் சிலம்பப் போட்டியில் உலக சாதனை படைத்தார்.
அருப்புக்கோட்டை அருகே தும்மு சின்னம் பட்டியை சேர்ந்த இளைஞர் சண்முகராம், 22, இவர் தொப்புலாக்கரை தனியார் நடுநிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக உள்ளார்.
சிலம்பம் சுற்றுவதில் தேர்ச்சி பெற்ற இவர், தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் நடந்த இம்பாசிபிள் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 6 மணி நேரம் ஒற்றைக்கம்பு வீச்சு, 2 மணி நேரம் வேல் கம்பு வீச்சும் தொடர்ச்சியாக சுழற்றி உலக சாதனை படைத்தார். சாதனை படைத்த இளைஞருக்கு கல்லூரி முதல்வர் கருப்பசாமி சான்றிதழும் பதக்கங்களும் வழங்கினார். பள்ளி நிர்வாகிகளும் பாராட்டினர்.
No comments:
Post a Comment