கவனத்திற்குரிய
முக்கிய செய்திகள்
9.11.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* காங்கிரஸ் ஆட்சியில் அமைந்த பொதுத் துறை நிறுவனங்களை மோடி அரசு அழிக்கிறது; ஆதிவாசிகளை வனவாசிகள் என பாஜக மாற்றி அவர்களது உரிமையைப் பறிக்கிறது என ராகுல் மற்றும் பிரியங்கா குற்றச்சாட்டு.
* இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமாகி விட்டதோடு, மேலும் விரிவடைகிறது. எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் என்ற தமிழ்நாடு அரசாணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: ஜன. 25க்கு வழக்கு ஒத்திவைப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காங்கிரஸ் ஆட்சியில் 2013இல் தொடங்கிய பொருளாதார மீட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது; திட்டமிட்ட சதி என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* பிஎச்டி சேர்க்கையில் இட ஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த முடியாது என்ற அய்அய்எம் கோழிக்கோடு வாதத்தை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்தது. ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்திட உத்தரவு.
ஹிந்துஸ்தான் டைம்ஸ்:
* எதிர்க்கட்சிகளின் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பிரச்சாரத்தை மழுங்கடிக்க ஓபிசி கணக்கெடுப்பை நடத்திட பாஜக திட்டம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment