தீபாவளி - தமிழருக்கான விழாவா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

தீபாவளி - தமிழருக்கான விழாவா?

மாணவி:  சார், தமிழர்கள் தீபாவளியை எதற்குக் கொண்டாடுகிறார்கள்?

ஆசிரியர்: எதற்காக கேட்கிறாய்?

மாணவி: தமிழ்ச் சங்க காலத்தில் இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தக் குறிப்பும் இலக்கியத்தில் இல்லை.

ஆசிரியர்: அதனால் என்ன?

மாணவி: இப்போது நாம் மட்டும் கொண்டாடுகிறோமே ஏன்?

ஆசிரியர்: கிருஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடு கிறார்கள்.

இஸ்லாமியர்கள் மிலாடி நபி கொண்டாடுகிறார்கள். அதைப் போலத்தான் இதுவும்.

மாணவி: தமிழர்களின் பண்டிகைப் பற்றிப் பேசும்போது நீங்கள் மற்ற மதத்தின் பண்டிகைகள் பற்றி பேசுறீங்களே?!

அப்படினா தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை என்பது தெளிவாகிறது. அது இந்துமத பண்டிகை என்று புரிகிறது.

ஆசிரியர்: ...🥺

மாணவி: சரி, கிறிஸ்துமஸ் கிறிஸ்து பிறந்த நாள், மிலாடி நபி, முகமதுநபி பிறந்தநாள். தீபாவளி யாருடைய பிறந்த நாள் சார்?

ஆசிரியர்: தீபாவளி - நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்.

மாணவி:🤔 மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத் தலைவர் களின் பிறந்த நாளைக் கொண்டாடும் போது இந்துமதம் மட்டும் நரகாசுரனின் இறந்த தினத்தை ஏன் இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடுகிறது?

ஆசிரியர்: நரகாசுரன் என்கிற கருப்பான பயங்கரமான அசுரன், பார்ப்பனர்களை யாகம் செய்யவிடாமல் தடுத்தான். அதனால் பார்ப்பனர்களும் தேவர்களும், பகவானிடம் சென்று முறையிடவே கிருஷ்ண அவதாரம் எடுத்து நரகாசுரனை கொன்றாராம்.

மாணவி: இந்தக்கதையில் பார்ப்பனர்கள் என்பது யாரென்று புரிகிறது சார். பார்ப்பனர்கள் இன்றும் கூட இருக்கிறார்கள். அப்படியானால் அந்த அசுரர்கள் யார்? எங்கு இருக்கிறார்கள்?

ஆசிரியர்: புராணங்களில் வரும் வருணனைகளை வைத்துப் பார்த்தால் பெரும்பாலான அசுரர்கள் என்பவர்கள் தமிழர்கள் தான். 

மாணவி: அப்படியானால் தீபாவளி பார்ப்பனர்களின் வெற்றி விழா. தமிழர்களை வீழ்த்திய நாள்.

ஆசிரியர்: ....

மாணவி: பார்ப்பனர்களுக்கு ஆதரவாக தமிழர்களை அழித்தக் கடவுள் எப்படி தமிழர்களுக்குக் கடவுளாவார்?

‘பிராமணர்'கள் தங்களைக் காத்த அந்தப் ‘பிராமண'க் கடவுளை நினைத்துப் பெருமையுடன் தீபாவளி கொண்டா டலாம்.

ஆனால் தமிழர்களான நாம் நம் தன்மானத்தை இழந்து எப்படி தீபாவளியை கொண்டாட முடியும்? இது நமக்கு அவமானம் இல்லையா! 

ஆசிரியர்: ....🥺

மாணவி: நரகாசுரனின் பிறந்த நாளை அல்லவா தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடவேண்டும்?

ஆசிரியர்: நரகாசுரனின் பிறந்த நாள் தான் தெரியாதே?!

மாணவி: நரகாசுரன் இறந்த நாளைக் கண்டுபிடித்த ஆரியப் வைதீக மதத்திற்கு அவரின் பிறந்த நாள் தெரி யாதா? இது அயோக்கியத்தனமில்லையா? 

தமிழ் அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் ஏன் இதுபற்றி ஒருபோதும் பேசியதில்லை? ஏன் சார் ?

ஆசிரியர்: உனக்கு ஏம்மா இவ்ளோ கோவம்?

மாணவி: இனிவரும் தலைமுறைக்காவது சரியான விளக்கத்தைச் சொல்லி இனமானமிக்க தமிழர்களை உருவாக்க வேண்டும் சார்!

ஆசிரியர்: நீ சொல்வது சரி தான் மா.🥺🥺🤔

தீபாவளிக்கு ஏன் திராவிடத் தலைவர்கள் வாழ்த்து சொல்லுவதில்லை என்பதற்கான விளக்கம் தான் இந்த பதிவு. 

- சமூக ஊடகத்திலிருந்து


No comments:

Post a Comment