சென்னையில் மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகள் தளர்வு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

சென்னையில் மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகள் தளர்வு?

சென்னை,நவ.29- சென்னை யில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல் களை அடக்கம் செய்யும் நடைமுறையில் சில மாற் றங்கள் கொண்டுவரப்பட லாம் என்கிறார்கள். சென் னையை பொறுத்தவரை, மயானங்களில், உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டால், அதற்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்தே அந்த உடலை தோண்டி எடுத்து, அதில் இன்னொரு உடலை மறு அடக்கம் செய்யும் நடைமுறை உள் ளது.

உடல் அடக்கம்

ஆனால், பெரும்பா லானவர்கள், இறந்தவர்க ளின் உடல்களை அடக் கம் செய்துவிட்டு, அதில் கல்லறையும் கட்டுகிறார் கள். இதன்காரணமாக, மயானங்களில் இறந்தவர் களை புதைக்க இடப்பற் றாக்குறை நிலவுகிறது. இது தொடர்பாக அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் ஆலோ சனை கூட்டம் சென்னை யில் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், நகர்ப் புற மயானங்களில் போதிய இடவசதி இல் லாத பிரச்சினை தொடர் பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது. 

மயானங்கள்

அதேபோல, மயானங் களில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு இடநெருக்கடி இருப்ப தாக அதிகாரிகள் கருத்து களை தெரிவித்துள்ள னர். மேலும், 426 சதுர கிமீ பரப்பளவுள்ள சென்னை மாநகராட்சியில் உள்ள 208 புதைகுழிகளில் சில இடங்களில் அடக்கம் செய்ய இடமில்லை என் பது உட்பட பல்வேறு விஷயங்களும் ஆலோ சிக்கப் பட்டுள்ளன.

கூட்ட முடிவில், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மயானங்க ளில் இடநெருக்கடியை போக்க விதிமுறைகள் தளர்த்தப்படவும் முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி, ஒரு உடலை தோண்டி எடுத்துவிட்டு, இன்னொரு உடலை மறு அடக்கம் செய்வதற்கான நடைமுறையை 14 ஆண் டுகளில் இருந்து, ஒரு ஆண்டாக குறைக்கவும் வாய்ப்பு உள்ளதாம்.. அதுமட்டுமல்ல, பெரி தாக கட்டப்பட்டிருக்கும் கல்லறையை சுற்றி கட்டி யுள்ள இடங்களை, சிறி யதாக மாற்றவும் அவர் களின் உறவினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப் பட உள்ளதாம்.. இதனால், மயானங்களில் இட வசதி கூடுதலாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் என்கி றார்கள். புதிய நடை முறை: கேரளா, மும்பை ஆகிய மாநிலங்களில் மயானங்களில் ஒரு ஆண் டிலேயே மறு அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், இதே நடை முறை, விரைவில் சென் னையிலும் அமல்படுத்தப் பட வாய்ப்பு உள்ளதாக வும் சொல்கிறார்கள். எனினும், பல்வேறு மத சமூகத்தினரிடம் பொது மக்களிடம் கருத்து கேட் காமல், இப்போதுள்ள நிபந்தனைகளை தளர்த் தும் முடிவை அவசர அவ சரமாக எடுக்கக்கூடாது என்றும் கருத்துகள் கிளம்பி உள்ளன.

No comments:

Post a Comment