ஹார்வார்ட் பல்கலை.யில் வி.பி.சிங் உரை பாடமானது வி.பி.சிங்கின் மகன் பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

ஹார்வார்ட் பல்கலை.யில் வி.பி.சிங் உரை பாடமானது வி.பி.சிங்கின் மகன் பேச்சு

விழாவில் வி.பி.சிங்கின் மகன் அஜயா சிங் பேசியதாவது: எனது தந்தைக்கு சிலை வைத்த தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் என்ன பேசுவது என தெரியாமல் நின்ற நிலையில் எனது மகள் வி.பி. சிங் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பேசிய ஒரு பேச்சை எடுத்துக் கொடுத்தார். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து மட்டும் நான் மீண்டும் கூற விரும்புகிறேன்.

எனது தந்தை பேசியதாவது, “1990 ஆகஸ்டு 7ஆம் தேதி நாட்டின் பிரதமராக 27 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தேன், இடஒதுக்கீடு அறிவித்ததன் மூலம் அரசாங்கத்தை மட்டும் இல்லாமல் பல உயிர்களையும் இழந்தோம். ஒரே இரவில்நான் நாட்டுக்கு எதிரானவன், ஜாதியவாதி, நாட்டின் எதிரி ஆனேன், அரசுப் பேருந்துகள் எரிக்கப்பட்டன, ரயில்கள் தாக்கப்பட்டன. நாளிதழ்களில் ஆதிக்க வாதிகளின் கருத்துகள் மட்டுமே எனக்கு எதிராக வெளி வந்தன. அப்போது பின்தங்கிய வகுப்பை சார்ந்த இளைஞர்கள் என்னை சந்தித்து நாங்கள் இந்த நாட்டின் இளைஞர் கள் இல்லையா? எனக் கேட்டனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பு போக மீதி உள்ள மக்கள் அனைவரும் 27 சதவீதம் இடஒதுக் கீட்டை நாட்டுக்கு எதிரானதாக கருதினர். இதனால் 27 சதவீத இடஒதுக் கீடு கிடைக்கிறதோ இல்லையோ இந்த நாட்டின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லாத மக்களின் இதயங்களில் ஒரு சதவீதமாவது இடம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்தது.

பிற்படுத்தப்பட்ட மக்களோ, எங்களை உயர் வகுப்பினர் எப்போதும் அசிங்கப்படுத்தி வருகின் றனர். நீங்கள் எங்களுக்கு ஆதரவாகபேசுவதால் அவர்கள் உங்களை இழிவாக பேசுகின்றனர் என்று தெரிவித்தனர். ஆனால், ஜனநாயகம் என்பது வெறும் வாக்குப் பெட்டியில் மட்டும் இல்லை. பிறப்பு அடிப் படையில் பிரிவினை இருந்தால் எப்படி ஜனநாயகம் வரும். மக்கள் அனைவரும் சமம் என்று கருதுகின் றனரோ அன்று இடஒதுக்கீடு தேவை இல்லை” என்று பேசி இருந்தார்.

பின்னர் அந்த பேச்சு 'சொசைட்டி அன்ட் பாலிட் டிக்ஸ் இன் இந்தியா' என்ற தலைப்பில் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பாடமாக அமைந்துள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment