திருப்பத்தூர், நவ. 16- திருப்பத்தூர் கழக மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் மீண்டும் குலத்தொழிலை திணிக் கும் "மனுதர்ம யோஜனா' திட்டம் குறித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் புத்தகத்தை பொது மக்களிடம் வழங்கி மனுதர்ம யோஜனாவின் ஆபத்துகுறித்து பிரச்சாரத்தை கழகப்பொறுப்பா ளர்கள் மேற்கொண்டனர்.
குலத்தொழிலில் வரும் கால இளைஞர்களை நிலை நிறுத்த செய்கின்ற "மனுதர்ம யோஜனா" திட்டம். அத் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர் அவர்களின் பெரும் பய ணம். திட்டத்தை ஒட்டி ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆபத்து! ஆபத்து! மீண்டும் குலத்தொழில் திணிப்பா? என்ற புத்தகம்.
இப் புத்தகத்தை, குலத்தொழி லில் ஈடுபட்டுள்ளவர்களின் எதிர் கால பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்கும் விதமாகவும் , ஆளும் ஒன்றிய அரசின் மாய வலையில் சிக்காமல் காக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கழகத் தோழர்களை தமிழர் தலை வர் கேட்டு கொண்டிருந்தார்.
அந்த வகையில் ஆசிரியர் அவர் களின் கட்டளை ஏற்று திருப்பத் தூர் மாவட்டம் கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், தனி ஒருவராக திருப்பத்தூர் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து குலத் தொழில் செய்பவர்களிடம் புத்த கத்தை வழங்கி விழிப்புணர்வை உண்டாக்கிக் கொண்டு வருகிறார்.
ஆசிரியர் அவர்களின் கட்ட ளையை செவ்வனே ஏற்று அதை செயல்படுத்திக் கொண்டிருக்கும் தந்தை பெரியாரின் பெருந்தொண் டருக்கு, வாழ்த்துகளும், பாராட்டுக ளும். இதுவே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விரும்பும் செயல்.
No comments:
Post a Comment