குடியாத்தம் சிவகாமி அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 2, 2023

குடியாத்தம் சிவகாமி அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்

குடியாத்தம், நவ.2- கழக பொதுக் குழு உறுப்பினர் வி.இ.சிவக் குமாரின் தாயார் இ.சிவகாமி (வயது-80 ) அவர்கள் சிலநாள் உடல் நலம் சரியில்லாமல் இருந்து 24.10.2023 அன்று இயற்கை எய் தினார். அவருடைய விழிகள் அகர்வால் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. அவருடைய உடல் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப்பட்டது.

அவருடைய படத்திறப்பு மற் றும் நினைவேந்தல் நிகழ்ச்சி 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு குடியாத்தம், 

1-ஆவது நீலிகொல்லைத் தெரு, நெல்லூர்ப் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், சிவகாமி அம்மாவின் படத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற் றினார்.

படத்திறப்பு நிகழ்ச்சியில் வர வேற்புரை ஆற்றிய திராவிடர் கழ கத்தின் வேலூர் மாவட்ட தலை வரும் மனிதநேய அறக்கட்டளை யின் தலைவருமான இர.அன்பர சன் எல்லோரையும் வரவேற்று உரையாற்றினார். மனிதநேய அறக் கட்டளை மூலமாக விழிக்கொடை மற்றும் உடற்கொடைக்கான செயல்பாடுகளை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

இந்தப் படத்திறப்பு நினைவேந் தல் நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற திராவிட கழக காப்பாளர் வி.சட கோபன், சிவகாமி அம்மாவை பற் றியும் அவர் எவ்வளவு பெரிய உற வுகளை அரவணைத்து சென்றார் என்பதை பற்றியும் மிகப்பெரிய உறவுகளை கொண்டிருந்தாலும் அத்தனை பேருடனும் இணக்க மான ஒரு நல்லுறவாக சிவகாமி அம்மா இருந்தார் என்பதை குறிப்பிட்டு பேசினார். மாவட்ட மகளிரணி தலைவர் ந.தேன்மொழி இணைப்புரை தொகுத்து வழங்கி னார்.

குடியாத்தம் சட்டமன்ற உறுப் பினர் வி.அமுலு விஜயன், மேனாள் நகர செயலாளர் திமுக அ.நட ராசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன்,மாநில ஒருங்கிணைப் பாளர் திராவிடர் கழகம் உரத்த நாடு இரா.குணசேகரன், மேனாள் நாடாளுமன்ற தொகுதி செயலா ளர் விசிக சிவ.செல்ல பாண்டியன், கண்/உடற்கொடை தலைவர், குடியாத்தம் ரோட்டரி சங்க மாவட்ட செயலாளர் எம்.கோபி நாத், மருத்துவரணி மாவட்ட தலைவர் மருத்துவர் முகமது சஹி, திமுக, தலைமை கழக பேச் சாளர்,திமுக த.பாரி, சிவகாமி அம்மையாரின் மகள் இ.வெண்மதி ஆகியோர் இரங்கல் உரையாற் றினர்.இறந்த ஒருவரின் கண்கள் பார்வை குறைபாடுள்ள எட்டு பேருக்கு பயன்படுகிறது என்றும் விழிக்கொடை எவ்வளவு அவசிய மானது என்றும் உரையாற்றினர்.

சிவகாமி அம்மையாரின் படத் தினை திறந்து வைத்து திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகர் நினைவேந் தல் உரையில் ஒரு தனி மனிதன் யாராக இருந்தாலும் அவனுக்கு மிகவும் முக்கியமானவர் தாய்தான், அந்த வகையில் சிவக்குமாருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தாய் தான் எல்லாமே. சிவக்குமார் அவர்களின் திராவிடர் கழக களப் பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவரின் தாய். 

குடியாத்தத்தில் பெண்களே முதல் முறையாக சிவகாமி அம்மா உடலை எடுத்துச் சென்றது முதல் புரட்சியாக இந்த ஊரிலே அமைந்து இருக்கிறது. இது மிகச் சிறந்த நிகழ்வாகும். பொதுவாக இதுபோன்று எங்கும் நிகழாது. ஆனால் இங்கே இந்த குடியாத் தத்தில் இந்த புரட்சி நடந்தி ருக்கிறது. மகள், மருமகள், உற வுகள் எல்லாம் சேர்ந்து இந்த புரட்சியை நடத்தி காட்டி இருக் கின்றார்கள்.

மேலும் இரண்டு சிறப்பு நிகழ் வுகள் இங்கே நடைபெற்று இருக் கின்றது. இறந்த உடம்பை பின் னப்படுத்தக் கூடாது என்ற மூட நம்பிக்கையை உடைக்கும் வகை யில் சிவகாமியின் கண்களை எடுத்து அகர்வால் மருத்துவ மனைக்கு கொடையாக அளித்து இருக்கின்றார்கள். இது மிகவும் சிறப்பான ஒரு வாய்ப்பாக அமைந் திருக்கிறது. அவருடைய இரண்டு கண்களால் எட்டு பேருக்கு பார்வை கிடைக்கும் படி இருக்கும் .எவ்வளவு சிறந்த செயலாக இது அமைந்திருக்கிறது.

அடுத்ததாக அவருடைய உடலை உடற்கொடையாக மருத்துவ ஆராய்ச்சி மாணவர்க ளுக்கு அளித்திருக்கிறார்கள். மிகச் சிறந்த கல்வி பணியாக இந்த குடும்பம் இதை செய்துள்ளது. மருத்துவ மாணவர்கள் கல்வி பயில பாடமாக அவரின் உடல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவ மாணவர்கள் பலன் பெறுவார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அதிக அள வில் உடற்கொடை அளித்தவர்கள் திராவிடர் கழகத்தினர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மாண வர்களின் ஆராய்ச்சி முடிந்த பிறகு இறந்தவரின் உடல் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மரி யாதை உடல் அடக்கம் செய்யப் படும் என்பதும் கூடுதல் தகவ லாகும்.

இப்போது தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் சிறந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதாவது மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் கொடையாக கொடுக்கப்பட்டால் அவரின் உடல் அரசு மரியாதையோடு 21 குண்டு கள் முழங்க அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பு தான் அது .எவ்வளவு அருமையான திட்டம். உடல் உறுப்பு கொடை என்பது எவ் வளவு முக்கியம் என்பதை உணர்ந்து அதை செய்பவர்களுக்கு சிறந்த மரியாதை இனி செய்யப் படும் என்று தமிழ்நாடு அரசின் வரவேற்பு போற்றத்தக்கது.

எத்தனை பிள்ளைகள் இருந் தாலும் அவர்களை பாசத்தோடு வளர்க்கக்கூடியவர் தாய்தான். இந்த குடும்பம் பொறுத்தவரை சிவகாமி அம்மையார் தன் பிள் ளைகளை நன்கு வளர்த்து இருக் கின்றார். மிகவும் நட்போடு பழகக் கூடிய சிவக்குமாரை நல்ல பண்பு நலன்களோடு வளர்த்தெடுத்திருக் கின்றார், அவருக்கு உறுதுனையாக அவரின் சகோதரிகள் கோ.தமிழ்ச் செல்வி, இ. வெண்மதி, இணையர் சி.லதா மற்றும் உறுவுகள் இருக் கிறார்கள். 

சிவகாமி அம்மையாரை இழந்து வாடும் அவரின் குடும்பத் திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறோம் என்று தன் உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கழக காப்பா ளர்கள் ச.ஈஸ்வரி, ச.கலைமணி, மாவட்ட செயலாளர் உ.விஸ்வ நாதன், கழக பொதுக்குழு உறுப் பினரகள் கு.இளங்கோவன், க.சிகா மணி, பெரியார் மருத்துவரணி செய லாளர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு, சோழிங்கநல்லூர் மாவட்ட தலை வர் ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், திமுக மாவட்ட துணைத் தலைவர் எஸ். பாண்டியன், நகர அவைத் தலைவர் க.கோ.நெடுஞ்செழியன், திமுக நகர துணைத் செயலாளர் ஜம்புலிங்கம், திமுக ஜி.மாதவன், சிபிஎம் நகர செலயாளர் பி.காத்தவ ராயன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் வி.குபேந்திரன், நகர மன்ற உறுப்பினர் அதிமுக எ. தண் டபாணி, ஓசூர் மாவட்ட மகளி ரணி தலைவர் ச.செல்வி, பொதுக் குழு உறுப்பினர் செல்வம், சோழிங்க நல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.சி.ஜெய ராமன், தாம்பரம் நகர தலைவர் சு.மோகன்ராஜ், அறிவுவழி காணொலி இயக்க ஒருங்கினைப்பாளர் சா.தாமோதரன், இரா.சிவா, நீலப் புலிகள் இயக்கம் சார்ந்த தோழர் புரட்சிமணி, செய்யாறு நகர கழகத் தலைவர் காமராஜ், வேலூர் மாவட்ட மக ளிரணி அமைப்பாளர் ச.கலை மணி, வேலூர் மாவட்ட மகளிர் பாசறை ச.இரம்யா, பாசறை செயலாளர் சு.வசுமதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிதாசன், குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன், வேலூர் மாநகர தலைவர் ந.சந்திரசேகரன், மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.தனபால், மாவட்ட இளைஞரணி தலைவர் பொ.தயாளன், சத்துவாச்சாரி வீ. பொன்மொழி, செய் யாறு வெங்கட்ராமன், பகுத்தறி வாளர் கழக சுபாஷ்சந்திரன், இளைஞரணி ந.கண்ணன், பகுத் தறிவாளர் கழக சையத் அலிம், காட்பாடி கழக தோழர்கள் தமிழ்தரணி, சீனிவாசன், தமிழ்ச் செல்வன், கழக தோழர்கள், உறவினர்கள் மற்றும் பகுதி மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தினர்.

No comments:

Post a Comment