மத்தியப் பிரதேச மாநில சட்ட மன்றத்தின் காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட் டுக்கள் டிசம்பர் 3 ஆம் தேதி எண் ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக -காங்கிரஸ் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்றத் தொகுதிகள் உள் ளன. இங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெறவேண் டும். தற்போது அங்கு பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் பாஜகவை வீழ்த்தி மீண்டும் அரியணை ஏற காங்கிரஸ் திட்டமிட்டு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காங் கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். மேலும் அங்கு நடந்த பொதுக்கூட் டத்தில் அவர் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார் என கூறினார்.
இதுதொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது:
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 70 ஆண்டுகளாக எந்த முன் னேற்றமும் இல்லை என அவர்கள் (பாஜக) கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வதற்காக இதனை அவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை 70ஆண்டுகளில் பள்ளி கள் இல்லாமல் இருந்தால் பிரதமர் மோடி எப்படி பள்ளி சென்றிருப்பார்? அவர் சென்ற பள்ளியே காங்கிரஸ் கட்டியது தான்.
ஆனால், அவர் கல்லூரி சென் றாரோ? இல்லையோ? என்பது எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர் கல்லூரி சென்றிருந்தால் அதுவும் காங்கிரஸ் கட்சி கட்டியதாக தான் இருந்திருக்கும். ஆனால், ஒன்றை என்னால் கூற முடியும். அவரது ‘‘பொலிடிக்கல் சயின்ஸ்'' சான்றிதழ் பிரிண்ட் செய்த கம்ப் யூட்டர் காங்கிரஸ் அரசு கொடுத்தது தான்'' என்றார்.
No comments:
Post a Comment