பட்டாசு கொளுத்தித் தீபாவளி கொண்டாடுவதால் ஏற்படும் உயிரிழப்பும் பொருளிழப்பும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

பட்டாசு கொளுத்தித் தீபாவளி கொண்டாடுவதால் ஏற்படும் உயிரிழப்பும் பொருளிழப்பும்!

தென்கிழக்காசியப் பசுமைஅமைதி (கிரீன் பீஸ் ) அமைப்பு ஆய்வு செய்து, காற்றுமாசு காரணமாக  2020ஆம் ஆண்டில் ஆறு மாநகரங்களில் எடுத்த புள்ளிவிவரப்படி இறந்த மக்கள் எண் ணிக்கையும், பொருளாதார இழப்பும் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது:

டில்லி

உயிரிழந்த மக்கள் 54,000.

பொருளாதார இழப்பு ரூ.58,895 கோடி

மும்பை

உயிரிழந்த மக்கள் 25,000.

பொருளாதார இழப்பு ரூ.26,912 கோடி

பெங்களூரு

உயிரிழந்த மக்கள் 12,000.

பொருளாதார இழப்பு ரூ.12,365 கோடி

அய்தராபாத்

உயிரிழந்த மக்கள் 11,000.

பொருளாதார இழப்பு ரூ.11,617கோடி

சென்னை

உயிரிழந்த மக்கள் 11,000.

பொருளாதார இழப்பு ரூ.10,910 கோடி

இலக்னோ

உயிரிழந்த மக்கள் 6,700.

பொருளாதார இழப்பு ரூ.8,000 கோடி

வழக்கம் என்பதில் 

    ஒழுக்கம் இல்லையேல் 

கழுத்துப் போயினும் 

     கைக்கொள்ள வேண்டாம்.

                                                                     - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

செவியைக்கிழிக்கும் ஓசை மிகுதி யால் ஏற்படும் நெஞ்சாங்குலை அதிர்ச்சி ஒருபுறம்!

'கந்தக டைஆக்சைடு ' எனும் நச்சுப் புகை ஏற்படுத்தும் நுரையீரல் சுவாசப் பாதிப்பு ஒருபுறம்!

இவற்றால் பறிபோகும் உயிர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கூடிய படி உள்ளது.

வீட்டுக்கு முன்பும் வீதிநடுவிலும் பட்டாசு வெடிக்கும் கொடூரம் உலகின் எந்தநாட்டிலும் இல்லாத கொடுமை!

ஊருக்கு ஒதுக்கமாய் அரசு ஒதுக் கித்தரும் இடத்தில், நேரக்கட்டுப்பாட் டோடு பட்டாசு வெடிக்கும் ஒழுங்கும் நாகரிகமுமே உலகம் முழுதும் உண்டு.

அந்த நாகரிகவாழ்வை நாம் பெறா விட்டால், மனிதர் வாழத் தகுதியற்ற ஊர்களை நாமே உருவாக்கி விடுவோம்.

உயிர்இழப்பையும் காசைக் கரியாக் கும் பண இழப்பையும் ஏற்படுத்துவது பட்டாசு!

பட்டாசு வெடிப்பதைக் கட்டுப்படுத் துவோம். மனிதர்கள் நலத்தோடு வாழும் நாகரிக சமுதாயம் உருவாக உறுதியேற் போம்.

  - சூலூர் பாவேந்தர் பேரவை


No comments:

Post a Comment