செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 21, 2023

செய்திச் சுருக்கம்

நிறுத்தம்

தமிழ்நாடு முழுவதும் வரும் 25ஆம் தேதி முதல் செலவினங்களை குறைக்கும் வகையில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் சில்லறை விற்பனை விநியோகத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தகவல்.

நதிகளை...

சென்னையில் உள்ள நதிகளை சுத்தம் செய்யும் வகையில் சிஆர்டிசி என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

நட்ட ஈடு...

கழிவறையில் ஒரு ரூபாய்க்கு பதில் 5 ரூபாய் வசூலித்ததால் முதியவருக்கு ரூ.30,004 தொகை நட்ட ஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தர விட்டுள்ளது.

மசோதா...

ஒன்றிய சுகாதார அமைச்சகம், 75 ஆண்டுகள் பழைமையான, நடைமுறையில் இருந்த மருந்தியல் சட்டம் 1948அய் ரத்து செய்து, இந்திய மருந்தாளுநர் ஆணையத்துக்கு பதிலாக தேசிய ஆணையம் அமைக்க வகை செய்யும் முயற்சியாக வரைவு மசோதா வின் ஒரு பகுதியாக அனைத்து மருந்தாளுநர்களின் விவரங்களுடன் கூடிய தேசிய மருந்தாளுநர் பதிவேட்டை ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது.

கேள்வி

குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் உத்தரவுக்கு அனுமதி மறுப்பது ஏன் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சொத்து வரி...

சென்னை மாநகராட்சியில் 2ஆம் அரையாண்டுக் கான சொத்து வரியாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேற்று வரை ரூ.375 கோடி வசூலாகியுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.

பறிமுதல்

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.1,760 கோடி பணம், பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்.


No comments:

Post a Comment