இலவச பேருந்தால் பெருமளவு பணம் மிச்சம் பெண்கள் மகிழ்ச்சி : மேயர் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

இலவச பேருந்தால் பெருமளவு பணம் மிச்சம் பெண்கள் மகிழ்ச்சி : மேயர் தகவல்

சென்னை, நவ.12 தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்ற புரட்சிகரமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த முன்னோடி திட்டத்தை வட மாநிலங் களிலும் செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் திட்டம் தமிழ் நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில், ‘என்ன நினைக் கிறார்கள் சென்னை பெண்கள்’ என சென்னை மாநகராட்சி ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறது.

சென்னை முழுவதும் 3 ஆயிரம் பேரிடம் இந்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 2,432 பேர் பெண்கள், 568 பேர் ஆண்கள். இது தவிர நூறு திருநங்கைகளும் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 89 சதவீத பெண்கள் போக்குவரத்துக்கு அரசு பேருந்தை மட்டுமே நம்பி இருக் கிறார்கள் என்பது தெரிந்தது. இதில் 82 சதவீதம் பேர் அரசு வழங்கியிருக்கும் இலவச பேருந்து பயணத்தின் மூலம் பெருமளவு பணம் மிச்சப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். அதில் 42 சதவீதம் பெண்கள் பேருந்து பய ணத்தின் போது சில துன்புறுத்தல் களுக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களில் 35 சதவீதம் பெண்கள் கூறும்போது பேருந்தில் ஏறும் போதும், பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் போதும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை சந்திப்ப தாக தெரிவித்துள்ளனர்.

பேருந்து பயணத்தின்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர் களில் 62 சதவீதம் பேர் துணிச்சலாக தட்டிக் கேட்டதாகவும் ஆனால் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் கூட உதவிக்கு முன் வரவில்லை என்றும் ஆதங்கப்பட்டனர். ஆனால் இது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகள் என்னென்ன இருக்கிறது என்பது பற்றி 62% பெண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. 32 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே 'காவலன் செயலி'யை பற்றிய புரிதல் இருக்கிறது. 10 சதவீதம் பேர் பெண்களுக்கு உதவு வதற்கான பெண்கள் சுற்றுக் காவல் வாகனத்தை பற்றி அறிந்திருக்கிறார்கள். 29 சதவீத பெண்கள் மாநகர பேருந் துகளில் அவசர உதவிக்கு வைக்கப்பட்டி ருக்கும் பொத்தான் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையை வெளி யிட்டு மேயர் ஆர். பிரியா கூறும்போது, ‘‘பேருந்து பயணம் செய்யும் பெண்கள் என்னென்ன பிரச்னைகளை எதிர் கொள்கிறார்கள். உங்களுக்கு என் னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வ தற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் கிடைத்துள்ள தகவல் களின் அடிப்படையில் மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு பரிந் துரைகள் செய்யப்படும் அடிக்கடி பேருந்துகளை இயக்க வேண்டும். பெண்களுக்காகவே பேருந்துகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவசரகால பொத்தான் பற்றிய விழிப்புணர்வை பெண் பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும் 10 சதவீத பெண்கள் இதே போல் பாலியல் ரீதியான தொந் தரவுகள் பேருந்துகளில் மட்டுமல்ல மெட்ரோ ரெயிலில் கூட நடப்பதாக தெரிவித்து உள்ளார்கள்’’ என்றார்.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, ‘‘நாட் டிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை என்பது பல்வேறு ஆய்வு களின் மூலம் தெரியவந்துள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் தான் அதிகமான மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. இந்த காவல் நிலையங்கள் மூலம் பெண் களுக்கு பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது. கலந்தாய்வு கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி என்று தெரியவரும் இடங்களில் கூடுதலான காவல் பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன’’ என்றார்.


No comments:

Post a Comment