தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தின் பாராட்டத்தக்க முடிவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தின் பாராட்டத்தக்க முடிவுகள்

ரூ.7,108 கோடி தொழில் முதலீட்டுக்கு ஒப்புதல் - 22,536 பேருக்கு வேலை வாய்ப்பு

சென்னை, நவ. 1- தமிழ்நாடு துறைமுக மேம்பாட்டுக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டில் ரூ.7,108 கோடி முதலீடு செய்ய உள்ள 8 நிறுவ னங்களுக்கு தொகுப்பு சலுகைகள் வழங்குவதற்கு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச் சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. 

தலைமைச் செயலகத்தில் நேற்று (31.10.2023) மாலை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடை பெற்றது. இதில் ஜனவரியில் நடக் கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட் டது. கூட்டத்துக்குப் பின் செய்தி யாளர்களைச் சந்தித்த நிதியமைச் சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வமாக உள் ளன. அந்த வரிசையில், 8 நிறுவ னங்கள் அமைப்பு முறையிலான தொகுப்புசலுகைகளை பெறுவதற் கும், ஏற்கெனவே உள்ள நிறுவனங் கள் விரிவாக்க நடவடிக்கைக்கு சலுகைகளை பெறவும் இந்த அமைச்சரவையில் கருத்துருக்கள் ஆய்வு செய்து அனுமதி வழங்கப் பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ண கிரி, கோயம்புத்தூர் மாவட்டங் களில் ரூ.7108 கோடி முதலீட்டில் 22,536 வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்துக்கு அமைச்சரவையில் தொகுப்பு சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் மின்வாகன பாகங்கள், காலணி உற்பத்தி, விண்வெளி பாதுகாப்பு, கண்ணாடிப் பொருட்கள், ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறையில் முதலீடுகளை செய்ய உள்ளனர்.

மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை

மேலும், தமிழ்நாடு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டு அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழில் துறையில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் கடற்கரை 1076 கிமீ நீளமாக உள்ளது. 4 பெரிய, 17 சிறிய துறை முகங்கள் உள்ளன. தொழில்வளர்ச் சிக்கு சிறந்த துறைமுக கட்டமைப்பு தேவைப்படுவதால், இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 16 ஆண்டுகளில் கடல் சார் வணிகங்களில் மாநிலங்களி டையே போட்டியுள்ளது. தனியார் துறை முதலீட்டை ஈர்க்கும் வகை யில் இந்த கொள்கை வடிவமைக்க வேண்டியுள்ளது. மகாராட்டிரம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் உள்ள துறைமுகக் கொள்கைகளை ஆய்வு செய்து, அதில் உள்ள கூறு களை உள்வாங்கி இப்போதுஉள்ள போட்டித்தன்மைற்கேற்ப துறை முக கட்டமைப்பை மேம்படுத்த இந்த கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. 

கப்பல் மறுசுழற்சி, மிதவை கலங்கள் கட்டுதல், துறைமுகங் களை மேம்படுத்துதல், வணிகரீதியாக சாததியமாக்குதல், அனும தியை எளிதாக்குதல், வியாபாரத்தை எளிதாக்குதல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுஉள்ளது.

பெரிய கப்பல்களை நிறுத்தும் வகையில்

மேலும், ஆழ்கடல் துறைமுக வளர்ச்சிக்குக்கு பெரிய கப்பல்களை நிறுத்தும் வகையில் துறைமுகங் களை விரிவாக்க மிகப்பெரியமுத லீடுகள் தேவைப்படுகிறது. கடல் புறம்போக்கு பகுதியில் நீண்டகால குத்தகைக்கும் இந்த கொள்கை வழிவகை செய்துள்ளது. நீர்விளை யாட்டுக்கள், பசுமை துறைமுகத் திட்டங்களையும் உள்ளடக்கி இந்த கொள்கை உருவாக்கப்பட் உடுள்ளது. மேலும், சேலம், திருச் சிராப்பள்ளி மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ளது.

தொகுப்பு சலுகைகள்

தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, செயின்ட்கோபைன் சிறீபெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூரிலும், ஒசூரில் அய்கால் டெக்னாலஜிஸ், இரும் பரப்பள்ளியில் நைலான் லெபாரட் டரீஸ், மற்றும் தமிழ்நாட்டில் பாடி, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம், ஒசூரில் இன்டர்நேஷனல் ஏரோஸ் பேஸ் நிறுவனம் என 8 நிறுவனங் களின் திட்டங்களுக்கு தொழில் கொள்கையில் தெரிவிக்கப்பட் டுள்ள அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகள் தொடர்பாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் உலக முதலீட் டாளர்கள் மாநாட்டின்போது ரூ.7,108 கோடிக்கான முதலீட்டுக்கு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள் ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment