மணல் கொள்ளை வழக்கு பொய்யான தகவலை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அளித்துள்ளது தி.மு.க. மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

மணல் கொள்ளை வழக்கு பொய்யான தகவலை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அளித்துள்ளது தி.மு.க. மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி

சென்னை, நவ. 29- ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை நடந்துள்ளதாக பொய்யான தகவலை அம லாக்கத்துறை, நீதிமன்றத்தில் அளித்துள்ளதாக தி.மு.க. மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ கூறினார்.

சென்னையில் தி.மு.க. மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ நேற்று (28.11.2023) செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்றால், அதற்கு அடிப்படையான ஒரு வழக்கு உரிய காவல்துறையால் பதியப் பட்டு விசாரிக்கப்பட வேண்டும். அமலாக்கத்துறை 4 முதல் தக வல் அறிக்கையை வைத்துக் கொண்டு இந்த வழக்கை விசா ரிக்கப்போவதாக கூறியுள்ளார் கள். அந்த 4 வழக்குகளுக்கும் அர சால் அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரிகளுக்கும் சம்பந்தம் இல்லை.

தனியார் மணல் கொள்ளைக் காரர்களால் நடத்தப்பட்ட குவாரிகளில் போலியான ஆதா ரங்களை வைத்துக்கொண்டு அமலாக்கத்துறை இந்த வழக் கை பதிவு செய்து தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற் படுத்த வேண்டும் என்ற அடிப் படையில் விசாரித்து வருகின்ற னர். 

அமலாக்கத்துறை தங்களது பதிலில், எவ்வளவு மணல் கொள்ளை நடந்துள்ளது என் பதை சேகரித்துள்ளோம் என் றும், ரூ.4,730 கோடிக்கு மணல் கொள்ளை நடந்துள்ளதாகவும் பொய்யான தகவல்களை உயர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார் கள். தி.மு.க. அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான கணக்கை கொடுத்து உள்ளனர்.

2016ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிட்ட போது, அ.தி. மு.க. ஆட்சியில் ஏறக்குறைய 20 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் மணல் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார்கள் என அமித்ஷா குறிப்பிட்டார். 

அப்படியென்றால் அ.தி. மு.க. மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் எவ்வ ளவு மணல் கொள்ளை வழக்கு கள் உள்ளன என்ற பட்டியலை யும் நீதிமன்றத்தில் சமர்பித்துள் ளோம்.

தமிழ்நாடு அரசு குவாரிகளில் எந்தவிதமான மணல் கொள் ளையும், முறைகேடுகளும் நடக்க வில்லை என்பதை உரிய ஆதா ரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக் கும் பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில் பதிவு செய்யப் பட்டுள்ளது என்பதற்கான ஆதா ரங்கள் உள்ளன. அந்த அடிப் படையில் செந்தில்பாலாஜிக்கு பிணை கேட்டு மனு தாக்கல் செய்வோம். 

-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment