பீகாருக்கு சிறப்புத் தகுதி கோரி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 24, 2023

பீகாருக்கு சிறப்புத் தகுதி கோரி அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

பாட்னா, நவ. 24 - மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தும் வகையில், பீகார் அமைச் சரவை கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், பீகாருக்கு சிறப்புத் தகுதி வழங்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் வெளியிட் டுள்ள பதிவில், நிதீஷ் குமார் கூறியுள்ளதாவது:மாநிலத்தில் சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் படி, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்த வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை, 50 சத வீதத்தில் இருந்து, 65 சதவீதமாக உயர்த்த முடிவு செய் யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மாநிலத்தின் நலனைக் கருதி, ஏழை மக்களின் நலன் கருதி, பீகாருக்கு சிறப்புத் தகுதியை ஒன்றிய அரசு அளித்தால், இந்த திட்டங்களை குறுகிய காலத்தில் நிறைவேற்ற முடியும்.பீகாருக்கு சிறப்புத் தகுதி கேட்டு, 2010இல் இருந்து நான் போராடி வருகிறேன்.

இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில், ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.பீகார் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்து வதற்காக, மாநிலத்துக்கு சிறப்புத் தகுதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment