அதன் தொடர்ச்சியாக “மருந்து கண்டுபிடிப்பு மற்றும் அதன் வளர்ச்சியில் புதிய எல்லைகள்” (New Frontiers In Drug Discovery & Development) என்ற தலைப்பில் பன்னாட்டுப் பயிலரங்கம் 22.11.2023 அன்று காலை 9 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை இப்பயிலரங்கை துவக்கி வைத்து சிறப்பித்தார்.
பேராசிரியர் முனைவர் அ.மு.இஸ்மாயில் மருந்தியல் துறைக்கான வாய்ப்புகள் மற் றும் புதிய கண்டுபிடிப்புக்கள் குறித்து உரையாற்றி, இளம் மருந்தாளுநர்களுக்கு தமது மருந் தியல் வாரவிழா வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
துவக்க விழா நிகழ்ச்சியின் நிறைவாக மருந்தியல் பயிற்சித் துறை பேராசிரியர் ச.இராஜேஷ் நன்றியுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து கோயம் புத்தூர் KMCH மருந்தியல் கல்லூரி யின் மருந்தியல் பயிற்சித்துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் “Mastering the Case and its Clinical Correlates – A Clinical Pharmacist’s Impact”என்ற தலைப்பில் தமது முதல் பயிலரங்கத்தை நிறைவு செய்தார்.
பன்னாட்டு மருத்துவப் பல்கலை...
மலேசியா, கோலாலம்பூர் பன்னாட்டு மருத்துவப் பல் கலைக்கழகத்தின் முதுநிலை மருந்தியல் பயிற்சித்துறையின் திட்ட இயக்குநர் முனைவர் எஸ். பழனிசாமி “Emerging Role of Pharmacists in Geriatric care” என்ற தலைப்பில் இணையவழி யில் இரண்டாம் பயிலரங்கத்தை நிறைவு செய்தார்.
மூன்றாம் பயிலரங்கமாக “Transforming the utility of Medicinal and Aromatic Plants (MAPs) towards the Industrial and Social needs” என்ற தலைப்பில் கோயம் புத்தூர் கற்பகம் மருந்தியல் கல்லூரியின் மூலிகை மருந்தியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் சி.எஸ்.கந்தசாமி மாண வர்கள் மத்தியில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நிறைவு விழா மாலை 4 மணியளவில் கல் லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூ ரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு மூலிகை மருந்தியல்துறைத் தலைவர் முனை வர் எஸ்.ஷகிலாபானு வரவேற்புரை யாற்றினார்.
ஆராய்ச்சிகள் - கண்டுபிடிப்புகள்
நிறைவு விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் கோயம் புத்தூர் கற்பகம் மருந்தியல் கல்லூரியின் மூலிகை மருந்தி யல் துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் சி.எஸ்.கந்தசாமி மருந்தியல் துறையில் நடை பெறும் சமீபத்திய ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து மாணவர்கள் மத்தியில் உரை யாற்றி வாய்மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பித்தலில் சிறப்பிடம் பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகளை வழங்கியதுடன் பயிலரங்கத்தில் பங்குகொண்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப் பித்தார்.
பேராசிரியர் முனைவர் அ.மு.இஸ்மாயில் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பேராசி ரியர் க.அ.ச. முகமது ஷபீஃக் நன்றியுரையாற்ற பயிலரங்கம் இனிதே நிறைவுற்றது.
இப்பயிலரங்கத்தில் பல் வேறு மருந்தியல் கல்லூரிகளி லிருந்து 150க்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் பங்கு கொண் டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவுத் திறன் போட்டிகள்
அதனைத் தொடர்ந்து மருந் தியல் வினாடிவினா, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பல போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றது.
62ஆவது மருந்தியல் வார விழாவின் மய்யக்கருத்தான நோயாளியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதலில் மருந்தளு நர்களின் பங்கு (Join Pharmacists to ensure Patient Safety) என்ற தலைப்பில் கருத்தரங்கம் 25.11.2023 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா.செந்தாமரை வரவேற்புரையாற்றினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய அலுவலக தொழில் நுட்ப மேனாள் அலுவலரும், சென்னை CL Baid Metha மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பயிற்சித்துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் குரு பிரசாத் மொகந்தா “நோயாளி யின் பாதுகாப்பை உறுதிப்படுத் துதலில் மருந்தளுநர்களின் பங்கு" (Join Pharmacists to ensure Patient Safety) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நோயாளியின் பாதுகாப்பை...
அவர் தமது உரையில்,
நோயாளிகளின் பாது காப்பை உறுதிசெய்வதில் மருந் தாளுநர்கள் புதிய கண்டுபிடிப்பு களை மேற்கொள்வதுடன் மருந்தியல் தயாரிப்புகளில் தவ றுகள் ஏற்படாதவாறு சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
மருந்துகளை நோயாளிக ளுக்கு அளிக்கும் பொழுது அதனை பயன்படுத்தும் விதம், எடுத்துக்கொள்ளக்கூடிய அள வுகளை பாமரருக்கும் புரியும் விதமாக சொல்வதும் உறுதிப் படுத்துவதும் ஒவ்வொரு மருந் தாளுநர்களின் கடமை என்றும் அத்தகைய தரமான, பொறுப் புள்ள மருந்தாளுநர்களை உருவாக்குவது மருந்தியல்துறை பேராசிரியர்களின் தலையாய கடமை என்றும் உரையாற்றி பல்வேறு கலை, அறிவியல் மற்றும் ஆய்வுப் போட்டிகளில் பங்குகொண்ட மாணவர்க ளுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
இவ்விழாவில் தேசிய நூலக வார விழாவினையொட்டி மருந்தியல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரூபாய் 69,054 மதிப்புள்ள 236 புத்தகங்களை முதல்வர் முனைவர் இரா.செந் தாமரையிடம் வழங்கினர்.
பெரியார் மருந்தியல் கல்லூ ரியின் பேராசிரியர் முனைவர் அ.மு.இஸ்மாயில், துணை முதல் வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி மற்றும் மூலிகை மருந் தியல்துறைத் தலைவர் முனைவர் எஸ்.ஷகிலாபானு ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சி யின் ஒருங்கிணைப்பாளர் பேரா சிரியர் க.அ.ச. முகமதுஷபீஃக் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment