இதுகுறித்து, ஒன்றிய அமைச் சருக்கு முதலமைச்சர் நேற்று (21.11.2023) எழுதிய கடிதம்
ஓமன் நாட்டின் துக்ம் துறை முகத்தில் உள்ள நூஹ்மற்றும் யாயா, அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழ்நாட் டைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில், பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்தார்.
மீன்பிடிப் படகுகளில் பணி புரிந்து வந்த 18 மீனவர்களின் ஊதியத்தை உரிமையாளர் தராத தால் அவர்களிடையே பிரச்சினை நிலவி வந்தது.
இந்நிலையில், பெத்தாலிஸை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளனர். அவரை உடனடியாக கண்டுபிடித்து, இந்தி யாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கும்படி பெத்தாலிஸின் மனைவி ஷோபா ராணி கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, ஓமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பெத்தா லிஸை மீட்டு, தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்
கன்னியாகுமரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரமும் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி யுள்ளார்.
அதில், ‘கன்னியாகுமரி மாவட் டம் கோவளம் மீன்பிடி கிராமத் தைச் சேர்ந்த பெத்தாலிஸ், ஓமனில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிக ளைச் சேர்ந்த மீனவர்களுடன் மீன்பிடிபடகில் பணியாற்றி வருகி றார்.
ஊதியம் குறைத்து தரப்பட்ட தால், உரிமையாளர் மற்றும் பெத்தாலிஸ் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெத்தாலிஸ் கடத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக அங்குள்ள மீனவர்களுக்கு உணவு தரப்பட வில்லை. இதுகுறித்து பெத்தாலிஸ் மனைவிக்கு உடன்சென்ற மீன வர்கள் தகவல் அளித்துள்ளனர்.
பெத்தாலிஸ் மனைவி ஷோபா ராணி, மீன்வளத் துறையினரிடம் தனது கணவரை மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, தாங்கள் நேரடியாக தலையிட்டு, ஓமன் நாட்டு உயர்மட்ட அளவிலான அதிகரிக ளுடன் பேசி, விரைவாக பெத் தாலிஸ் மற்றும் இதர மீனவர்களை அங்கிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment