மானமிகு தந்தை பெரியார் கல்வி நிறுவனத்தில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
அன்பார்ந்த அறிவு கண்களே! இன்று (17.9.2023) தந்தை பெரியார் அவர்களுக்கு 145 ஆம் ஆண்டு பிறந்த நாள்.
தந்தை பெரியார், குழந்தை முதல், அவர் உயிர் பிரியும் நாள் வரை இந்த மானிடச் சமூகத்திற்காக வாழ்ந்து செயலாற்றியவைகளை எண்ணிப் பார்க்கின்றேன். தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கெல்லாம் உழைத்த மாமனிதர்களில் தலைசிறந்தவராவார். தொண்டு செய்வதற்கென்றே பிறந்து வளர்ந்து செயலாற்றியவராவார்.
கரடு முரடாக கிடந்த நிலத்தை எப்படி நன்நிலமாக்கி உழுது பயிர் செய்கின்றோமோ, அதுபோல, காட்டு மிராண்டியாகக் கிடந்த காட்டு விலங்காண்டிகளை மானிட, மனித சமூகமாக மாற்றிக் காட்டிய எம் அருமைத் தலைவர் தந்தை பெரியாரைப் போல் இன்னொருவரை காணக் கிடைக்க பெற முடியாது. கூழாங்கற்களாய் கிடந்த அறிவற்ற சமூகத்தை மானிடராக்கிய எம் தலைவருக்கு இன்று பிறந்தநாள். பெரியார் மட்டும் இந்த சமூகத்தை திருத்தாமல் போயிருந்தால் இந்த சமுதாயம் கருகிய மலராகத்தான் போயிருக்கும். யாரிடமும் கற்காமல் தன் சொந்த புத்தியைப் பயன்படுத்தி ஏன்.? எதற்கு.? என்று கேட்டு அதற்கான விடையையும் கண்டு, மாடாய் கிடந்த சமூகத்தை மானமும், அறிவும் பெற தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த தன்மான செம்மலாவார்.
பெரியார் யாரையும் வெறுத்தவர் அல்ல, அனைவரையும் திருத்தியவராவார். பெரியார் வழிவந்தவர் எல்லாம் அறிஞர்கள் ஆனார்கள். வழி தவறியவர்கள் எல்லாம் கிறுக்கர்களானார்கள். மாற்றத்துக்கு மாறு என்று சொன்னவர் பெரியார். அன்று 'சொன்னார் உலகை முட்டையளவுக்கு சுருக்கிக் காட்டுவார் என்றார். இன்று உள்ளங்கையில் வைத்து உலகம் முழுவதையும் நேரில் காண்கின்றாய்! வாய்ப்பு கொடுத்தால் நம் மக்களும் நிலவுக்குச் செல்வார்கள் நிலா நிலா ஓடி வா என்று அழைத்தாய். இன்று நிலாவுக்கே சென்று விட்டனர்.
நம் தமிழ் மக்களுக்கும் பகுத்தறிவு இருப்பதால்தான் நிலவுதனில் விளையாடுகின்றனர். தோஷம் என்பது பார்ப்பான் மொழியில் நோய். செவ்வாய் தோஷத்தையும் அடக்கி ஆள முடிகிறது அல்லவா.?
இல்லாத ஒரு திருப்பதி வெங்கடாசலபதி கடவுள் தான் சந்திரனுக்கு அனுப்பி வைத்தார் என்று கூறும் கபோதி பயல்களுக்கெல்லாம் பாடம் கற்பித்த நம் அறிஞர்களால் பெண்கள் வெங்கடாசலத்தின் அற்ப புத்தியின் மகிமையை உடைத்து காட்டினர்.இனியாவது சிந்தித்து செயல்படு.!
சிந்தித்தால் சித்தனாவாய்!
புத்தியை பயன்படுத்தியவன் புத்தன் ஆவான்!
சிந்திக்க மறுத்தால் கிறுக்கனாவாய்!.
பெரியார் சொல் கேள்!
உலக மக்களில் நீ ஒரு தனி மனிதனாவாய்!
பெண் சமூகத்தினரை அடக்காதீர் வாய்ப்பு கொடுத்தால் உன்னையும் மீறி வெற்றி பெறுவர். வெற்றியும் பெற்று விட்டனர்.
ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்கியவர் பெரியார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தையும் படிக்க வைத்ததினால் அவர்களும் இன்று கோயிலுக்குள் செல்ல முடிகிறது. பார்ப்பனர்களால் காணாமல் போன சாமியைத் தேட மோப்ப நாயும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காவல் துறையினரும் கர்ப்பகிரகத்துக்குள் செல்ல முடிகிறது அல்லவா.? இந்த உரிமையைப் பெற்றுத் தந்தவர் பெரியார் அல்லவா? இப்ப எங்கடா போச்சு உன் வர்ண தர்மம்.?
இது பெரியார் மண்!
இது திராவிட மண்!
இங்கு மாற்றானுக்கு இடமில்லை! மூடநம்பிக்கை ஒழியட்டும்!
பெரியாரால் தான் இன்று திராவிடமாடல் ஆட்சி நடைபெறுகின்றது.
வாழ்க பெரியார்!
வெல்க பெண் சமூகம்!
மிச்சம் இருப்பதை மானமிகு.பெருந்தகை.தமிழர் தலைவர்.ஆசிரியர், பெரியாரின் அடிச்சுவடு அவர்கள் ஒழித்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார் என்பது உறுதி.!
- வை நடராசன், கைவல்யம் முதியோர் இல்லம்
No comments:
Post a Comment