திறன்பேசியிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளியால் உடல் குழப்பமடைந்து சுறுசுறுப்பாக இருக்க முயலும். மெலட்டோனின் ஹார்மோனும் சுரப்பதிலும் இடையூறு ஏற்பட்டு தூக்கம் வராது.
நம் உடலுக்கென்று இருக்கும் தூக்க சுழற்சி சுற்றுப்புற சூழ்நிலையை வைத்தும் தீர்மானிக்கப்படும். வெளிச்சம் நிறைந்த சூழலில் சுறுசுறுப்பாகவும், இருளான நிலையில் ஓய்வெடுக்கவும் உடல் நினைக்கும். இரவில்தான் நல்ல தூக்கத்தை தரும் மெலட்டோனின் ஹார்மோன் உடலில் சுரக்கும்.
படுக்கையறையில் திறன்பேசி பயன்படுத்தும்போது ஸ்மார்ட்போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளியால் உடல் குழப்பமடைந்து சுறுசுறுப்பாக இருக்க முயலும். மெலட்டோனின் ஹார்மோனும் சுரப்பதிலும் இடையூறு ஏற்பட்டு தூக்கம் வராது. இதனால்தான் இரவில் திறன்பேசி பயன்படுத்துகிறவர்கள் தூக்கமின்மையால் அவதிப்படு கிறார்கள்.
மேலும் திறன்பேசியின் (ஸ்மார்ட் செல்போன்) எல்இடி லைட் வெளிச்சம் கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிப்பதால் பார்வைக் குறைபாடும் நாளடைவில் ஏற்படும்.
இதனால்தான் விளக்குகள் அணைக்கப் பட்ட பிறகு இரவில் திறன்பேசி பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
No comments:
Post a Comment