இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 24, 2023

இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

10.03.1935 -குடிஅரசிலிருந்து..

6. சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.

7. சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  - அ.8  சு.271.

8. பிராமணனைப் பார்த்து, நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெய்யைக்  காய்ச்சி ஊற்ற வேண்டும். அ.8  சு.272.

9. சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தில் உட்கார்ந்தால் அவனது இடுப் பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.   - அ.8  சு.281.

10. பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை.  -  அ.8.  சு.349.

11. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும். - அ.8 சு.380

12. அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். - அ.8.சு.410.

13. பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் 

சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான்.-அ.8  சு.413

14. பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப் பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான் - அ.8.சு.417.

15. சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. - அ. 9  சு. 416

16. பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங்கில்லை.  - அ.8  சு. 155.

17. பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து, கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம். - அ.9  சு.248.

18. பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்.  - அ.9  சு. 317

19. பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள். - அ. 9 சு.319. 

No comments:

Post a Comment