கருநாடக மாடல் போன்ற திட்டங்களை தெலங்கானாவிலும் காங்கிரஸ் நிறைவேற்றும் கருநாடகா மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 28, 2023

கருநாடக மாடல் போன்ற திட்டங்களை தெலங்கானாவிலும் காங்கிரஸ் நிறைவேற்றும் கருநாடகா மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா

அய்தராபாத். நவ. 28 தெலங்கானாவில் வருகிற 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-ஆவது முறையாக ஆட் சியை பிடிக்க பி.ஆர்.எஸ். (சந்திரசேகர ராவ்) தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். 

அதேவேளையில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை பிடிக்க வாக் குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. கருநாடகா மாநிலத்தில் பா.ஜன தாவை வீழ்த்த முக்கியமான அய்ந்து வாக்குறுதிகளை அளித்தது. மக்களும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தினர்.

தற்போது காங்கிரஸ் கட்சி "கருநாடகா மாடல்" என மற்ற மாநில தேர்தலின்போது பயன் படுத்தி வருகிறது. அந்த வகையில் தான் தெலங்கானாவில் முக்கியமான ஏழு வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஆனால் சந்திரசேகரராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி, கருநாடகாவில் காங் கிரஸ் கட்சி தேர்தலின்போது அளித்த முக்கியமான வாக்குறுதிகளை நிறை வேற்ற வில்லை. காங்கிரஸ் பொய் சொல்கிறது என பிரச்சாரம் செய்து வருகிறது. அதேபோல்தான் பா.ஜனதாவும் பிரச்சாரம் செய்து வருகிறது. 

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆத ரித்து கருநாடகா மாநில முதல மைச்சர் சித்தராமையா தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டார். 

அப்போது சித்தராமையா கூறும் போது "செய்தித்தாள் மற்றும் தொலைக் காட்சிகளில், கருநாடகா மாநிலத் தில் காங்கிரஸ் கட்சி அளித்த முக்கிய அய்ந்து வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சொல் வதை நான் பார்த்தேன். பா.ஜனதா தலைவர்கள், பி.ஆர்.எஸ். தலைவர் மற்றும் மற்ற தலைவர்களும் சொல்கிறார்கள். இது உண்மை அல்ல. நாங்கள் மே மாதம் ஆட்சிக்க வந்தோம். நாங்கள் கேபினட் அறைக் குள் சென்றதும், அய்ந்து வாக் குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முடிவை எடுத்தோம். 

அதே நாள் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அதற்கு சற்று நேரம் எடுத்துக் கொண்டது. அவ்வளவு தான்" என்றார்.

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் பி.ஆர்.எஸ்.- காங் கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சந்திரகேசர ராவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒரு தொகுதியில் காங் கிரஸ் வலுவான வேட்பாளரை நிறுத்தியுள்ளது..


No comments:

Post a Comment