இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 25, 2023

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது

காசா, நவ.25 இஸ்ரேல்  _ ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது முதற்கட்டமாக 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.

 முதல் குழுவாக 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித் துள்ளது என இஸ்ரேல் பாது காப்பு படை தெரிவித்துள்ளது. கடந்த அக்.7ஆ-ம் தேதி பாலஸ் தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரே லில் இருந்து 200-க்கும் மேற் பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத் திய போரில் காசா பகுதியில் இதுவரை13,000 க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க உள் ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தனர்.

அந்த வகையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத் துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். அதோடு, 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ் தீனர்கள் விடுதலை செய்யப்படு வார்கள் என்றும் தகவல் வெளி யானது. அதாவது இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் விடு விக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு அறிவித்தபடி தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கியதை அடுத்து ஹமாஸ் தங்கள் கட் டுப்பாட்டில் இருந்த பிணைக் கைதிகளை விடுவித்துள்ளது. 13 இஸ்ரேலியர்கள் மற்றும் 12 பிற நாட்டினர் என மொத்தம் 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் முதல் குழுவாக விடுதலை செய்துள்ளது. 13 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை தங்கள் நாட்டின் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை வட்டாரம் தெரிவித் துள்ளது. பிணைக் கைதிகள் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலமாக இஸ்ரேல் அனுப்பப் பட்டுள்ளனர். "விடுதலை செய் யப்பட்டவர்களில் 13 இஸ் ரேலிய குடிமக்கள் உள்ளனர். 10 தாய்லாந்து குடிமக்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகன்" என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவித்த அதே நேரம், இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தை களை விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜெருசலேம்: பாலஸ்தீன கைதி களுக்கான ஆணையர் கதுரா ஃபேர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு கரையில் ஏராளமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் சிறைபிடித்துள்ளது. இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 39 பாலஸ்தீன கைதிகளும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக் கப்பட உள்ளனர். இதற்கு பதிலாக, ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்திய 240 பேரில்பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 13 பேரை காசா-எகிப்து எல்லையில்ஹமாஸ் தீவிரவாதிகள் ஒப்படைத்தனர். செஞ்சிலுவை சங்கத்திடம் பாலஸ்தீன கைதிகள் ஒப்படைக்கப் பட்ட பிறகு இஸ்ரேலிய கைதிகள் ஜெருசலேமுக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்.

விடுவிக்கப்படும் பிணைக் கைதிகளை அழைத்து வருவ தற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர் களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை வழங்கும். விடுவிக்கப்படும் கைதிகள் மருத் துவ பரிசோதனைகளுக்குப் பிறகு அவர்களது உறவினர் களிடம் ஒப்படைக்கப்படுவர் என்று இஸ்ரேல் தெரிவித் துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் மேலும் கூறுகையில், “இஸ்ரேல்-ஹமாஸ் இடையே யான போர் இன்னும் முடிவ டையவில்லை. வெள்ளிக் கிழமை அதிகாலை முதல் அம லுக்குவந்துள்ள இந்த 4 நாள் போர் நிறுத்தம் என்பது ஒரு தற்காலிக நடவடிக்கையே. காசாவின் வடக்கு முனை பகுதிகள் இன்னும் ஆபத்தான போர்மண்டலத்தில்தான் உள்ளது. ஏனெனில் அங்கு போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட வாய்ப் புகள் உண்டு. ஹமாஸ் பிணைக் கைதிகளை தொடர்ந்து விடு விக்கும்பட்சத்தில் இந்த போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள் 1,200 பேரை சுட்டுக்கொன்றதுடன், 240 பேரை சிறைபிடித்தனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ராணு வம் நடத்திய தாக்குதலில் 13,300-க்கும் அதிகமான பாலஸ் தீனர்கள் கொல்லப்பட்டனர்.   

இந்நிலையில், கத்தார் நாட் டின்சமரச முயற்சியாலும், அமெரிக்கஅதிபர் ஜோ பைடன் ஆதரவுடன் பலவாரங் களாக நடந்த பேச்சுவார்த் தையின் பலனாகவும் போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.


No comments:

Post a Comment