சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா தரப்பில் வாதம்
சென்னை, நவ.11 ஸநாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான விரும்பத்தகாத கருத்துகள் குறித்துப் பேச நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு உரிமை உள்ளது என ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (10.11.2023) வாதம் முன்வைக்கப்பட்டது.
ஸநாதனத்திற்கு எதிராக பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக்கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப் பட்டிருந்தது.
இந்த வழக்கில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் தரப் பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அமைச்சர் பி.கே. சேகர் பாபு தரப்பில், ஸநாதன வழக்கில் தனக்கு எதிரான உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின் தரப்பில் அரசமைப்புச் சட்டம் மத நம்பிக்கையை மட்டுமல்லா மல் நாத்திக கொள்கையையும் பாது காக்கிறது என்று வாதங்கள் முன்வைக் கப்பட்டன. கோ வாரண்டோ வழக்கானது நேற்று நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தரப்பில் மூத்த வழக்குரைஞர் விடுதலை ஆஜராகி, “வரையறுக்கப் படாத காரணங்களை கூறி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது கோ வாரண்டோ உத்தரவு பிறப்பிக்க கோருவது என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை தன்மைக்கு எதிரானதாக அமையும். அதனால் இந்த மனு ஏற்கத்தகதல்ல.
இத்தகைய கோ வாரண்டோ உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான அதி காரப் பகிர்வானது அனுமதிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தகுதி நீக்கம் செய்ய புதிய நிபந்தனையை சேர்க்கவும், இந்த கோட்பாடானது அனுமதிக்கவில்லை.
மதத்தை பின்பற்றுவதற்கான அரச மைப்புச் சட்ட உரிமையை விட உயர்ந் ததாக பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை உள்ளது. அருவெறுக்கத்தக்க மத நடைமுறைகளை விமர்சனம் செய்ய பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை வழிவகை செய்கிறது. ஸநாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான விரும்பத்தகாத கருத்துக்கள் குறித்துப் பேச நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு உரிமை உள்ளது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதி அனிதா சுமந்த் நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment