தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (4.11.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் நிச்சயம் பா.ஜ. வெற்றி பெற முடியாது என்கிற நிலையில், இலக்கை அடைவதற்கு அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, ஒன்றிய புலனாய்வு துறை ஆகியவற்றை பயன்படுத்தி எதிர்கட்சி ஆளுகிற மாநிலங்களிலும், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் எதிர்கட்சி தலைவர்கள் மீதும், மாநில அமைச்சர்களின் வீடுகளிலும் ஒன்றிய அரசு சோதனை நடத்தி வருகிறது.
இதன் மூலமாக எதிர்க்கட்சிகளை முடக்கி விடலாம் என்று பா.ஜ. அரசு கனவு காண்கிறது. இந்தியாவிலேயே பா.ஜ. ஆட்சியின் அவலங்களையும், ஆர்எஸ்எஸ், பா.ஜ. சித்தாந்தங்களையும் கடுமையாக எதிர்த்து, அரசியல் பேராண்மையுடன் குரல் கொடுத்து வரும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். இவரது ஆட்சியை முடக்குவதற்கு தமிழ்நாடு கவர்னரை பயன்படுத்துகிறார்கள்.
மக்கள் நலன்சார்ந்து தமிழக அரசு செயல்படுவதாலும், மதச்சார்பற்ற கூட்டணியின் ஒற்றுமையினாலும் மக்கள் பேராதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிற நிலையில் பாஜவின் பழிவாங்கும் போக்கு நிச்சயமாக முறியடிக்கப்படும் என்று கூறி யுள்ளார்.
No comments:
Post a Comment