பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியம் முடக்கப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியம் முடக்கப்படும்

சென்னை, நவ. 11- பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒன்றிய - மாநில அரசு  ஊழியர்களின் ஓய்வூதியம் முடக்கப்படும் அல்லது குறைக் கப்படும் ஆபத்து உள்ளது என்று தலைவர்கள் எச்சரித்துள்ளனர். 

சென்னையில் கடந்த 7.11.2023 அன்று நடைபெற்ற அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேள னத்தின் முதலாவது அகில இந்திய   மாநாட்டை வாழ்த்தி மூத்த தலை வர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில்,

“நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னரும் மதத் தின் பெயரால் வெறுப்பு பிரச்சாரங் கள் நடைபெறு கின்றன. ஓய்வூதி யதாரர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு  நாட்டிலும் உலகிலும் என்ன நடக் கிறது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டிய மிகப்பெரிய கடமை இருக்கிறது. கோரிக்கைகளுக்காக அரசை எதிர்த்து போராடுவது; ஒருபக்கம் இருந்தாலும் எதிர்கால நன்மைக்காகவும் போராட வேண் டும்” என்றார். மேலும், “பல ஒன்றிய அரசு ஊழியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். பள்ளி ஆசிரியர்கள் தற்காலிகமாக எடுக் கப்படுகின்றனர். கல்லூரி ஆசிரி யர்கள் தற்காலிகமாக எடுக்கப்படு கின்றனர்.

தொழில்நுட்பம் ஒருபக்கம் வளர்ந்து வருகிறது. மறுபக்கம் வேலையின்மையும்  அதிகரித்து வருகிறது.  நாம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை  எதிர்க்கிறோம்; ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டம் விரை வில் முடிவுக்கு வரப்போகிறது. இது நீடிக்கும் என்று உத்தரவாதம் இல்லை.  2024பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான அரசு நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண் டும். மீண்டும்  அவர்கள் அதிகாரத் திற்கு வந்தால் தற்போது கிடைத்து வரும்  ஓய்வூதியமும் கிடைக்காது.  புதிய ஆட்களை வேலைக்கு எடுப் பதில், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய் வூதியம் வழங்குவதில், விலைவாசி உயர்வு என பல பிரச்சினை களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் சில பத்திரிகைகள் நீங்கள் தற்போது பெற்றுக்கொண்டிருக்கும் ஓய்வூதி யம் உயரும் என  எழுதுகின்றன; இதற்கான அறிவிப்பு இந்தாண்டு முடிவதற்குள் வரும் என்று பத்திரிகைகள்தான் சொல்கின்றன; அனைவருக்கும் 5கிலோ அரிசி கிடைக்கப் போகிறது என்ற கூட செய்திகள் வருகின்றன. ஆனால் அதற்கான உத்தரவாதம் இல்லை. நாட்டில் லட்சக்கணக்கான மக் கள் விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவும் உள்ள னர்.  இதர  ஓய்வூதியம் பெறுவோ ரையும் நீங்கள் உங்களோடு சேர்த் துக்கொள்ளவேண்டும். அனை வரையும் இணைத்துப் போராடி னால் தான் கோரிக்கைகளை வெல்ல முடியும்” என்றும் அவர் கூறினார்.

அ.சவுந்தரராசன்

சிஅய்டியு மாநிலத்தலைவர் அ. சவுந்தரராசன் பேசுகையில், “நிலக்கரி, எஃகு, ரயில்வே , காப்பீடு, தொலைத் தொடர்பு, ஆசிரியர்கள், மற்றும் பல துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக  ஒன்றிய அரசு வேளாண் தொடர்பான  சட்டங்களை திரும்பப்பெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்யக்கோரி புதுடில்லி ராம் லீலா மைதானத்தில் சமீபத் தில் ஓய்வூதியர்களும், ஒன்றிய அரசு ஊழியர்களும் மாபெரும் பேரணியை நடத்தியதை  பாராட் டுகிறேன். ஒன்றிய அரசு  இந்திய அரசமைப்பு சட்டத்தின் முக்கிய கூறுகளை மதிக்காமலும் அவற்றை மீறும் வகையிலும் மதச்சார்பற்ற பன்முகத் தன்மைக்கு ஊறுவிளை விக்கும் வகையிலும் செயல்பட்டு வருவதால் நமது  நாடு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. 

கடந்த பல ஆண்டுகளாக வெறுப்பூட்டும் பிரச்சாரம் அதி கரித்துள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைதி மற்றும் நல்லிணக் கத்திற்கு பாடுபடக்கூடிய  தலை வர்கள் குறி வைத்து தாக்கப்படுவது அதிகரித்து உள்ளது. இந்திய மக்களின் பல் வேறு தரப்பினருக்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக் கையை எதிர்த்து அனைத்துத் தரப் பினரையும் இணைத்துப் போராட் டங்களை வலுப்படுத்துவோம்” என்றார்.

No comments:

Post a Comment