குறிஞ்சிப்பாடியில் பகுத்தறிவு ஆசிரியர் அணியினர் எடுத்த முப்பெரும் விழா மாட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 5, 2023

குறிஞ்சிப்பாடியில் பகுத்தறிவு ஆசிரியர் அணியினர் எடுத்த முப்பெரும் விழா மாட்சி!

குறிஞ்சிப்பாடி, நவ. 5- கடலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் குறிஞ்சிப்பாடி வி.ஆர் .திருமண மண்ட பத்தில் 4.11.2023 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வைக்கம், சேரன்மாதேவி போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா - என முப்பெரும் விழா மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் இரா.பெரியார் செல்வம் தலைமையில், மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கோ.வேலு, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முனியம்மாள் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது.

நகர கழக தலைவர் கனகராசு வர வேற்புரை ஆற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேக ரன் "வைக்கம் போராட்டம் ஏற்படுத்திய மாற்றங்கள்" எனும் தலைப்பில் வர லாற்று சிறப்புமிக்க கருத்துகளை சிறப்பு ரையாக எடுத்து வைத்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி. அருணாசலம், "சேரன்மாதேவி குருகுல போராட்ட திருப்புமுனை" எனும் தலைப்பில் கருத்தரங்க உரையாற்றினார். கானக்குயில் கவிதா "முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்" எனும் தலைப்பில் கருத்தரங்க உரை ஆற்றினார்.

மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் ஆத்தூர் தமிழ் பிரபாகரன், பகுத்தறிவு ஆசிரியர் அணியின் செயல் பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். மற்றும் மாவட்ட இளைஞர் அணி தலைவர் உதய சங்கர், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் தமிழ் ஏந்தி, சிதம்பரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடுமாறன், பட்டிமன்ற பேச்சாளர் நவஜோதி, கடலூர் கழக செயலாளர் குணசேகரன், இந்திரா நகர் கிளைக் கழகத் தலைவர் பாஸ்கர், செய லாளர் கண்டன், அப்பியம்பேட்டை கிளைக் கழக தலைவர் தனசேகரன், கட்டியங்குப்பம் கிளை தலைவர் சேகர், வேகாகொல்லை கிளை தலைவர் வேணுகோபால், பொன்வெளி கிளை தலைவர் சீதாராமன், மறுவாய் கிளை தலைவர் திருநாவுக்கரசு, மகளிர் அணி கலைச்செல்வி, சுமலதா மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் தர்ம லிங்கம் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று கருத்துரை ஆற்றினர். 

சூரியனார் கோயில் மூர்த்தி, வேகா கொல்லை மாணிக்கவேல் ஆகியோர் பாடல்கள் பாடினர். முடிவில் நகர கழக அமைப்பாளர் இந்திரஜித் நன்றி கூறினார்

No comments:

Post a Comment