அரசியல் கட்சிகளுக்கு வழங் கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரங்களை தயாராக வைத் திருங்கள் ஆய்வு செய்வோம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தேர்தல் பத்திரத் திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்தது.
கடந்த 2017_20-18ஆ-ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி மசோதாவாக (தேர்தல் பத்திரம் திட்டம்) தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவதற்கு வழிவகுக்கப்பட்டது. அதாவது அரசியல் கட்சிகள் நன்கொடை பெற உதவும் தேர்தல் பத்திரங்கள் நிதி சட்டம் கடந்த 2017இல் அறிமுகப்படுத்தப் பட்டன. இந்த திட்டம் கடந்த 2018ஆ-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது.
நிதி மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டதால் நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் இல்லாம லேயே நிறைவேற்றப்பட்டது. ரிசர்வ் வங்கிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் திருத்தி இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் தேர்தல் நிதி வழங்கு வதற்கான தேர்தல் பத்திரங்களை வெளியிடும் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இதன்படி, எஸ்பிஅய் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம் என்றும் இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது, 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும் எனவும் இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருந்தனர்.
இது சட்டவிரோதம் என்றும் இந்த சட்டத்தில் உள்ள சரத்துகள் பலவும் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நீடிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நீண்ட நாட்களாக விசாரிக்கப்படா மலேயே இருந்து வந்தது. கடந் தாண்டு டிசம்பர் மாதம் வழக்கினை விசாரிக்க கோரிக்கை வைத்தபோது, தற்போதைக்கு தேர்தல் எதுவும் இல்லை, இந்த வழக்கினை உடனடியாக விசா ரிக்க வேண்டியது இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தார்கள். தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதி பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக் கள் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக் கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,பி.ஆர்.கவாய், பர்தி வாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப் பட்ட தேர்தல் நன்கொடை பத்திரங்களை தயாராக வைத்திருங்கள், ஆய்வு செய்வோம் என்றும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதை தடுக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசியல் கட்சிகளின் உண்மை தன்மையை குடிமக்கள் அறியக்கூடிய அடிப்படை உரிமையை மீறுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 31 அரசியல் கட்சிகள் ரூ.16,438 கோடியை நன்கொடை யாக பெற்றுள்ளன என மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் வாதம் வைத்தார். தேர்தல் நன் கொடை பத்திரங்கள் ஊழல்வாதி களை பாதுகாக்கிறது என வழக் குரைஞர் கபில் சிபில் கூறியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் அரசியல மைப்பின் 3ஆம் பாகத்தின் கீழ் உள்ள எந்தவொரு அடிப்படை உரிமைகளையும் மீறவில்லை என அட்டர்னி தெரிவித்துள்ளார். எனவே, வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசா ரணை தொடரும் என அறிவித்தது.
இதனிடையே, ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட ரமணி உச்ச நீதிமன்றத்தில் 4 பக்க மனுவை தாக்கல் செய்தார். அதில், தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களின் குற்றப் பின்னணியை அறிந்து கொள்ள மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது. எனினும், அரசியல் கட்சிகளின் வருவாய், அந்த வருவாய்க்கான ஆதாரங் களை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இல்லை. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப் பூர்வமானது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப் படவில்லை. யாருடைய உரிமை களும் மீறப்படவில்லை என கூறப் பட்டிருந்தது.இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
No comments:
Post a Comment