கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. மாநில அரசுகளின் ஒப்புதலை பெறாமல் ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவுகள் மேற்கொள்ள இயலாது. தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாக இல்லை. மருத்துவமனை, மருந்தகம் மாநிலப் பட்டியலில் உள்ளது. மக்கள் அனை வருக்கும் மருத்துவ வசதி அனைத்து நிலையிலும் அனைத்து வகையிலும் சமமாக கிடைக்க உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசிற்கு உள்ளது.
பொறுப்பு மாநில அரசிற்கு, அதிகாரம் ஒன்றிய அரசிற்கு என்ற அணுகுமுறை மக்களாட்சி மாண்புகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.
மருத்துவப் பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கையில் விதிமுறைகளை தீர்மானிக்கும் உரிமை மாநில அரசிற்கு உள்ளது.
- பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
'தீக்கதிர்', 27.11.2023 ஏட்டிலிருந்து
No comments:
Post a Comment