கொலாலம்பூர், நவ. 28 - இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம் பர் முதல் விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் அறிவித்துள் ளார். பி.ஜே.பி. கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா வில் இருந்து மலேசியா -வுக்கு வரும் பயணிகள் 30 நாட்கள் வரை தங்குவ தற்கு விசா தேவையில்லை என்று அறிவித் துள்ளார்.
இதனால் மலேசியா -வுக்கு அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு வாய்ப்பு ஏற்ப டும் என்றும் அதனால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என் றும் கூறப்படுகிறது.
மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மலேசியாவுக்குக் கொண்டு வரும் முயற்சி யில் நாடு முழுவதும் உள்ள பொதுப் போக்கு வரத்து வசதிகள் மற்றும் விமான நிலையங்களை சீர்செய் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அன் வர் தெரிவித்தார்.
வழக்கமான பாது காப்பு நடவடிக்கைக ளுடன் கூடிய புதிய விசா நடைமுறை தொடர் பான கூடுதல் விவரங் களை உள்துறை அமைச் சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் அறிவிப் பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
No comments:
Post a Comment