கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இளம் வயதில், குறிப்பாக 18-45 வயதினரில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிக ரித்து வருவதாக தகவல்கள் வெளி யாகின. குறிப்பாக, உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக இந்திய மருத் துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சி எம்ஆர்) ஆய்வு மேற்கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி, திரு நெல்வேலி, விருதுநகர், கன்னியா குமரி அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை ஓமந்தூரார் அரசு மருத் துவக் கல்லூரி, கோவை கேஎம் சிஎச், கோவை பிஎஸ்ஜிமருத்துவ அறிவியல் ஆராய்ச்சி கழகம், மதுரை மருத்துவக் கல்லூரி, சென்னை ராமச்சந்திரா ஆராய்ச்சி நிறுவனம், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவமனைகளை சேர்ந்த மூத்த மருத்துவர்கள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிலையில், அய்சிஎம்ஆர் தனது 12 பக்க ஆய்வறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 19 மாநிலங் களில் 47 பெரிய மருத்துவமனை களில் விரிவான ஆய்வு நடத்தப் பட்டது. 729 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 2,916 பேரிடம் தகவல்கள் கேட்ட றியப்பட்டன.
கடந்த 2021 அக்டோபர் முதல் கடந்த மார்ச் 31ஆ-ம் தேதி வரை 18-45 வயதினரில் திடீரென உயிரிழந்த 29,171 பேரின் மருத்துவ அறிக்கைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வுப்படி, இளைஞர்களின் திடீர் உயிரிழப் புக்கு கரோனா தடுப்பூசி எந்த வகையிலும் காரணம் கிடையாது. 2 தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இடையே உயிரிழப்பு குறைவாகவே உள்ளது.
ஒரு தவணை கரோனா தடுப் பூசி செலுத்திக் கொண்ட பிரிவினரில் உயிரிழப்பு சற்று அதிக மாக இருக்கிறது. இளம் வயது உயிரிழப்புகளில் 10 சதவீதம் பேரின் உயிரிழப்புக்கு குடும்பப் பின்னணி முக்கிய காரணமாக உள்ளது. 27 சதவீத உயிரிழப்புக்கு புகையிலை, போதை பொருள் பழக்கமும், 27 சதவீத உயிரிழப்புக்கு மது பழக்கமும் முக்கிய காரணமாக உள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பலர் இளம் வயதில் உயிரிழந்துள்ளனர். இவை தவிர உணவு பழக்கம், அள வுக்கு அதிகமான உடற்பயிற்சி ஆகியவையும் இளம் வயது மர ணத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
உயிரிழப்பதற்கு 24 அல்லது 48 மணிநேரம் முன்பு அவர்கள் அதிக அளவில் மது அருந்தியிருக்க வேண்டும். அல்லது அதிக உடல் உழைப்பில் ஈடுபட்டிருக்க வேண் டும். அவர்களது வாழ்க்கை முறை, குடும்ப உடல்நல வரலாறு ஆகிய வையே திடீர் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைந் துள்ளன.
No comments:
Post a Comment