புற்றுநோய் தடுப்பு உயர்தர சிகிச்சை மய்யத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

புற்றுநோய் தடுப்பு உயர்தர சிகிச்சை மய்யத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, நவ. 18- ஏழை எளிய மக்கள் சிகிச்சைகள் பெறும் வகையில் எக்விடாஸ் ஹெல்த்கேர் அறக்கட்டளையின் சிருங்கேரி சாரதா எக் விடாஸ் மல்டி ஸ்பெஷா லிட்டி & கேன்சர் கேர் மருத்துவமனையை தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் 16.11.2023 அன்று தொடங்கி வைத் தார். தாம்பரம் தொகுதி யின் சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.ஆர்.ராஜா இந் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு சேவை செய்வதற்காக சென்னை, கவுரிவாக்கத் தில் திறக்கப்பட்டுள்ள இந்தப் பிரத்யேக புற்று நோய் மருத்துவமனை, எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின், வங்கிக்கு அப்பாற்பட்ட சேவை முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது. 100 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை, பொருளாதார வசதி குறைந்த பிரிவினருக்கு நியாயமான சேவைக் கட் டணத்தில் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை களை வழங்கும் என இம்மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் வைத் தீஸ்வரன் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment