நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்பட்டது

புதுடில்லி, நவ 27- நாடாளு மன்ற மழைக்கால கூட் டத் தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை நடைபெற்றது.

 இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெற்றது. 

இதையடுத்து, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் தேதி இன்று வெளியாகி யுள்ளது. 

இது தொடர்பாக நாடாளுமன்ற விவ காரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பாக டிசம்பர் 2ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத் தில் டிசம்பர் 2ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட் டம் நடைபெறும் என வும் இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்கு மாறும் ஒன்றிய அரசு சார்பில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச் சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment