கழகச் செயல்பாடுகளில் தீவிரம் செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 30, 2023

கழகச் செயல்பாடுகளில் தீவிரம் செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

செங்கல்பட்டு,நவ.30- செங்கல் பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தின் கலந்துரையாடல் கூட்டம், 26.11.2023 ஞாயிறு 1 மணிக்கு, மறை மலைநகர், பழனி இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என் னாரெசு பெரியார் தலைமையில், மாவட்ட தலைவர் செங்கை சுந் தரம், மாவட்ட செயலாளர் செம் பியன் ஆகியோர் முன்னிலையில், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் மு.அருண் கடவுள் மறுப்பு கூற கூட்டம் தொடங்கியது.

ப.க. மாவட்ட தலைவர் சிவ குமார், பக மாவட்ட செயலாளர் சி.தீனதயாளன், பக மாவட்ட அமைப்பாளர் மு.பிச்சைமுத்து பகுத்தறிவு ஆசிரியரணி சே. சகாய ராஜ், கொடுங்கையூர் தங்கமணி, தங்க.தனலட்சுமி, இள.தனசேக ரன், தீ.ஆனந்தன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் செ.வினோத் குமார், மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.சூர்யா, இளமதி செல் வம், மறைமலைநகர் தலைவர் திருக்குறள் வெங்கடேசன், மதுராந் தகம் நகர செயலாளர் ஏ செல்வம், கூடுவாஞ்சேரி மா.இராசு ஒன்றிய தலைவர் மா நரசிம்,மன் வள்ளுவர் மன்ற செயலாளர் மா. சமத்துவ மணி, பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன், மாவட்ட செய லாளர் அ.செம்பியன் மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம், பகுத்தறிவு கலைப்பிரிவு தலைவர் மு.கலைவாணன் ஆகியோர் கருத் துரை வழங்கினர். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையுரை ஆற்றினார்.  

மறைமலைநகர தலைவர் திருக் குறள் வெங்கடேசன் நன்றி கூறி னார். கூட்டத்தில், டிசம்பர் -2 சுயமரியாதை நாள் "தகைசால் தமிழர்" ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் பிறந்தநாளில் விடுதலை சந்தாக்களுடன் கலந்து கொண்டு சிறப்பிப்பது எனவும், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பெரியார் பெருந்தொண்டர் மேனாள் மாவட்ட தலைவர் அ.கோ. கோபால் சாமி அவர்களால் அமைக்கப்பட்ட பெரியார் படத்தினை புதுப்பித்து திறப்பது எனவும், டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாள் தெருமுனைக் கூட்டம் நடத்துவது எனவும், எதிர்கால இயக்க நட வடிக்கைகள் வேகப்படுத்துவது எனவும், திராவிடர் கழக வீராங் கனை காப்பாளர் க.பார்வதி அம்மாவிற்கு இரங்கல் தெரிவித் தும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

No comments:

Post a Comment