இதுகுறித்து அக்கட்சியின் நிறுவ னத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:--
பல்கலைக்கழக வேந்தர்களாக முத லமைச்சரை நியமித்து தமிழ்நாடு சட் டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அவற்றை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளு நரின் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ளது. அவற்றை, உச்சநீதி மன்றம் உத்தர விடும்வரை மீண்டும் கிடப்பில் போட்டு வைக்காமல் தமிழ் நாடு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகி றோம். “இந்தியாவில் உயர்கல்வி பயி லும் மாணவர்களில் கிட்டத்தட்ட 85% பேருக்கு மாநில அரசுகள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள்தாம் உயர்கல்வியை வழங்குகின்றன” என 2019-2020ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த அனைத் திந்திய ஆய்வறிக்கை (கிமிஷிபிணி) தெரிவிக் கிறது. உயர்கல்வியிலும், ஆராய்ச்சிக் கல்வியிலும் இந்தியாவிலேயே முதலி டம் வகிக்கும் மாநில மாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அதுமட்டுமின்றி இந்தியா வின் முதன்மையான 100 பல்கலைக் கழகங்களில் தமிழ்நாட்டிலுள்ள 9 மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.
மாநில அரசுகள் தமது நிதியைக் கொண்டு உருவாக்கும் பல்கலைக்கழகங் களுக்கு வேந்தராக ஆளுநரை நியமிக்க வேண்டுமென எந்த சட்ட நிர்ப்பந்தமும் கிடையாது. அரசமைப்புச் சட்டம் வரை யறுத்திருக்கும் ஆளுநரின் பணிகளில் பல் கலைக்கழக வேந்தராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை.
தனியார் நடத்தும் நிகர்நிலைப் பல் கலைக்கழகங்களில் அவற்றின் உரிமை யாளர்கள்தான் வேந்தர்களாக உள் ளார்கள். அவற்றில் ஆளுநருக்கு எந்த வேலையும் கிடையாது. இந்தியா சுதந் திர மடைந்தபின் ஒன்றியத்திலும் மாநி லங்களிலும் ஒரே கட்சியே ஆட்சி செய் ததால் ஆளுநர்களை வேந்தர்களாக நியமிக்கும் மரபு அறிமுகமானது.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த கட்சி களும் அதே மரபைப் பின்பற்றி வந்தன. அதையே வாய்ப்பாக வைத்து ஆளுநர் களைப் பயன்படுத்தி பா.ஜ.க.அல்லாத மாநிலங்களில் உயர்கல்வியை சீரழிக் கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது குஜராத்தில் இருக் கும் 14 மாநில அரசுப் பல்கலைக் கழகங்களில் அப்போது வேந்தராக இருந்த ஆளுநரை நீக்கி விட்டு முதல மைச்சரான தன்னை வேந்தராக நிய மித்து சட்டம் இயற்றினார்.
அதற்கு காங்கிரஸால் நியமிக்கப் பட்டிருந்த ஆளுநர் கமலா பெனிவால் ஒப்புதல் தரவில்லை. ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க.வைச் சேர்ந்த ஓ.பி.கோலி குஜராத்தின் ஆளு நர் ஆனதும் 2015 இல் அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தந்தார். இப் போது முதலமைச்சர் தான் அங்கே வேந்தராக உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (18.11.2023) வெளிநடப்புச் செய்த பா.ஜ.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் குஜராத்தில் மோடி எடுத்த நடவடிக்கை தவறு என்கிறார்களா? ஒன்றிய - மாநில உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப் பட்ட ஆணையங்கள் ஆளுநரை வேந்த ராக நியமிக்க வேண்டாம் என்றுதான் பரிந்துரை செய்துள்ளன.
“அரசமைப்புச் சட்டத்தால் முன் வைக்கப்படாத ‘பல்கலைக்கழக வேந் தர்’ முதலான அதிகாரங்களை ஆளுந ருக்கு வழங்குவதை மாநில சட்ட மன்றங்கள் தவிர்க்க வேண்டும்” என்று சர்க்காரியா ஆணையம் பரிந்துரைத் துள்ளது. “ஆளுநரை வேந்தராக நிய மிப்பதால் வீண் சர்ச்சைகளுக்கும், பொது மக்களின் விமர்சனங்களுக்கும் அவர் ஆளாக நேரிடும்” என பூஞ்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே, ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதில்லை என்ற தமிழ்நாடு அரசின் முடிவு அரசியல் சட்டப்படி சரியானது; மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவக்கூடியது.
இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று ஆதரிக் கிறோம். தமிழ்நாடு ஆளுநர் இப்போ தாவது தனது அதிகாரம் என்ன வென்பதைப் புரிந்துகொண்டு இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment