21.11.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
* மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி - வழக்கு டிச.1க்கு ஒத்திவைப்பு.
* டிவிட்டரில் இந்தியா 4 டிரில்லியன் டாலர், அதாவது ரூ.333 லட்சம் கோடி பொருளாதாரத்தை தாண்டிவிட்டதாக பாஜக செய்தி பரப்பியது. ஆனால் இவை எல்லாம் பொய் என்று காங்கிரஸ் விளாசி உள்ளது.
* சாதனைகளை சொல்ல முடியாமல் ஜாதி, மதம் பற்றி பேசி பாஜக வாக்கு சேகரிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
* நீதிபதிகள் மாற்றல் தொடர்பான தாமதம் குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இது நல்ல அறிகுறி அல்ல. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால் பலர் பணிமூப்பு இழக்கிறார்கள் என ஒன்றிய அரசின் போக்குக்குக் கண்டனம்.
தி இந்து
* தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டம் - டில்லியில் ஜனவரி மாதம் மாநாடு.
டைம்ஸ் ஆப் இந்தியா
* ஒடிசா மாநிலம் கேந்த்ராபாரா ஊரில் பார்ப்பனர் களுக்கு மட்டுமே அனுமதி என்ற பலகையுடன் தனிச் சுடுகாடு. தாழ்த்தப்பட்டோர் சமூக அமைப்புகள் அரசுக்குப் புகார்.
* குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக மேனாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய மத்தியப் புலனாய்வுத் துறை அனுமதி கோரிய ஓராண்டுக்குப் பிறகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி. மேலும், தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ஜி.பாஸ்கரன் மீது ஊழல் வழக்குத் தொடரவும் அனுமதி.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment