வெறிநாய்போல் சுற்றி வளைப்பதா? அய்.டி. சோதனை குறித்து காங்கிரஸ் தாக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 5, 2023

வெறிநாய்போல் சுற்றி வளைப்பதா? அய்.டி. சோதனை குறித்து காங்கிரஸ் தாக்கு

புதுடில்லி, நவ.5 சட்டீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் தோல் வியை தவிர்க்க தனது கடைசி ஆயுதமான அமலாக்கத்துறை நடவடிக்கையை ஏவி வெறி நாய்களைபோல சுற்றி வளைத்து பூபேஷ் பாகெல் நற்பெயரை கெடுக்க பா.ஜ. சதி செய்வதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சட்டீஸ்கர் மாநில சட்டப் பேரவை  வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மகாதேவ் ஆப் தொடர்பாக சோதனை நடத்திய அமலாக் கத்துறை வெளியிட்ட அறிக் கையில் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிட மிருந்து ரூ508 கோடி பணம் பெற்றதாக தெரிவித்தது.

இதுதொடர்பாக டில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று (4.11.2023) நடந்த செய் தியாளர் சந்திப்பில் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், அபிஷேக் சிங்வி ஆகியோர் கலந்து கொண்டனர். அப் போது  ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: 

மகாதேவ் சூதாட்ட செயலி துபாயிலிருந்து இயக்கப்படு கிறது. இந்த செயலியை பயன்படுத்திய 450 பேரை சட்டீஸ்கர் அரசு கைது செய்து, 70 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஒன்றிய அரசுக்கு அந்த செயலியை முடக்க கோரிக்கை விடுத்தார். ஆனால், அது பற்றி கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு, இப்போது சிலரை கைது செய்து, பாகெல் மீது கற்பனை புகார் அறிக்கை அளிக்க செய்துள்ளது. இது அப்பட் டமான தேர்தல் நடத்தை விதி மீறல் என்பதால் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளிக்கும். சட்டீஸ்கர், ராஜஸ்தான் தேர்தலில் பாஜ தோல்வி உறுதியாகி விட்டது. அதனால், தனது கடைசி ஆயுத மான அமலாக்கத்துறையை ஏவி வெறிநாய்களைப்போல முதலமைச்சர் பூபேஷ் பாகெலை சுற்றி வளைக்க பாஜ உத்தரவிட்டுள்ளது. அதன் மூலம் பாகெலின் நற்பெயரை கெடுப்பதே பாஜவின் சதித் திட்டம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

28% ஜிஎஸ்டி விதித்து சட்டப்பூர்வமாக்கியது ஏன்?

அபிஷேக்சிங்வி கூறுகை யில்,’ மகாதேவ் செயலி இன் னும் செயல்பாட்டில் உள்ளது. மோடி-ஷா-சீதாராமன் ஆகியோர் கூட்டணி இந்தியா வில் உள்ள அனைத்து 'ஆன் லைன் ஆப்களையும்' சட்டப் பூர்வமாக்கி உள்ளனர். இந்த நேர்மையற்ற செயல்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப் பட்டுள்ளது’ என்று குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசம் பாலகாட் மாவட்டம் காதங்கி நகரில் நடைபெற்ற  பொதுக்கூட்டத் தில் பேசிய கார்கே, ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சி.பி.ஐ, ஐ.டி, ஈ.டி ரெய்டுகளை ஏவி விட்டால் காங்கிரஸ் தொண் டர்கள் பயந்து போய் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி விடு வார்கள் என்று பாஜ நினைக் கிறது. காங்கிரஸ் ஒரு போதும் பயப்படாது. சட்டீஸ்கர், ம.பி. மாநிலங்களில் காங்கிரஸ் வெல்லப்போவதை பாஜ பார்க்கத்தான் போகிறது ’ என்று தெரிவித்தார். 

என்னை விசாரிக்காமல் குற்றம் சுமத்தியது ஏன்?

ராய்ப்பூரில் நேற்று (4.11.2023) செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் பூபேஷ் பாகெல், ‘பா.ஜ. எப் போதும் நேரடியாக மோதா மல், அமலாக்கத்துறை, வரு மான வரித்துறை ஆகியவற்றின் துணையோடு தேர்தலில் போட்டியிடும். என்னிடம் எந்த விசாரணையும் மேற் கொள்ளாமலேயே குற்றம் சுமத்தப்பட்டது ஏன்? மகா தேவ் செயலி உரிமையாளர் களை இதுவரை ஒன்றிய அரசு கைது செய்யாமல் தேடப் படுபவர்களாக ஏன் அறிவித்தது? இன்னும் அந்த சூதாட்ட செயலி முடக்கப் படாமல் ஏன் விட்டு வைக் கப்பட்டுள்ளது? அதனால் சூதாட்ட உரிமையாளர்க ளோடு மோடி மற்றும் அவர் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக நான் நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன்’ என்று அதிரடி கேள்விகளை எழுப் பியுள்ளார்.


No comments:

Post a Comment