ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 13, 2023

ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி, நவ. 13- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி பெரியார் மாளிகை யில் 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திக்கேயன் தலைமையில் துணை தலைவர் ஜெயராமன் வரவேற்பு ரையுடன் துவங்கியது.

மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்--வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து வழிகாட்டி உரையாற்றினார்.

நிகழ்வில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பா.தென்னரசு, செயலாளர் க.இளவரசன், துணை தலைவர் மு.ரகுபதி, துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், ஆவடி நகர தலைவர் கோ.முருகன், துணை தலைவர் சி.வ.வேலு, திருநின்றவூர் நகர இளைஞரணி செயலாளர் சிலம் பரசன், மனோகரன் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்தில்,  19-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று புதுச்சேரியில் நடைபெறும் மாநில பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் ஆவடி மாவட்டம் சார்பில் இரண்டு கார்களில் செல்வது என்றும் தோழர் களின் எண்ணிக்கை அதிகமானால் தொடர் வண்டி யில் செல்வது எனவும்,  26-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் உண்மை வாசகர் வட்ட கூட்டத்தை தொடங்கு வது எனவும்,

டிசம்பர் 2023 முதல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூட்டம் மற்றும் உண்மை வாசகர் வட்ட நிகழ்வு இரண்டையும் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடத்துவது எனவும், 2024 ஆம் ஆண்டு மாதத்தின் வார இறுதியில் திருக்குறள் வகுப்பு தொடர்ந்து நடத்துவது எனவும்,

புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை துரிதப்படுத் துவது, பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட இளைஞர்களை தொடர்பு கொள்வது மற்றும் பள்ளி கல்லூரிகளில் துண்டறிக்கை பிரச்சாரம் செய்வது எனவும், கழக தோழர்களின் உறவை மேம்படுத்தும் நோக் கில் குடும்ப கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது ஆண்டு தோறும் இயக்கம் சார்ந்த பயணமாக குடும் பத்துடன் சுற்றுலா பயணம் செல்ல ஏற்பாடு செய்ய திட்டமிட்டு மே மாதத்தில் செயல்படுத்துவதெனவும்,  ஆசிரியர் அணி, எழுத்தாளர் அணி, கலை இலக்கிய அணி, ஊடகவியல் அணி மற்றும் சமூக சேவை அணி ஆகியவற்றை பகுத்தறிவாளர் கழக தலைமையுடன் ஆலோசித்து அமைக்க முயற்சி செய்வதெனவும், தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்படும் புத்தகங்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டின் நாள் காட்டி, நாட்குறிப்பு (டைரி) ஆகியவற்றை மாவட்ட கழக அலுவலகத்தில் கிடைக்க ஏற்பாடு செய்வதெனவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இறுதியாக மாவட்ட ப.க.து.செ.சுந்தர் ராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment